6th std tamil study material term 1 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது . கடலும் , மலையும் , கதிரும் . நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா ? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ ? நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் , மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது .

நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் , மழையின் பயனையும் எந்த பாடலில் போற்றுகிறது ?

-சிலப்பதிகாரம்

பாடல்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்

அங்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

-இளங்கோவடிகள்

பாடல் வரிகளின் பொருள்

 வான்நிலா போற்றுவோம் ! வான்நிலா போற்றுவோம் !

மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த

வெண்குடை போல அருளை வழங்கும்

வான்நிலா போற்றுவோம் ! வான்நிலா போற்றுவோம் !

கதிரவன் போற்றுவோம் ! கதிரவன் போற்றுவோம் !

காவிரி நாடன் சோழனின் ஆணைச்

சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும்

கதிரவன் போற்றுவோம் ! கதிரவன் போற்றுவோம் !

வான்மழை போற்றுவோம் ! வான்மழை போற்றுவோம் !

கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும்

மன்னனைப் போல முகில்வழி சுரக்கும்

வான்மழை போற்றுவோம் ! வான்மழை போற்றுவோம் !

பாடலின் பொருள்

 தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன் . அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது . அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது . அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம் .

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன் . அவனது ஆணைச் சக்கரம் போல , கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது . அதனால் கதிரவனைப் போற்றுவோம் !

அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான் . அதுபோல , மழை , வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது . அதனால் மழையைப் போற்றுவோம் !

நூல் வெளி

 சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் . இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது . இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர் . ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம் , இதுவே தமிழின் முதல் காப்பியம் . இது முத்தமிழ்க் காப்பியம் , குடிமக்கள் காப்பியம் , என்றெல்லாம் போற்றப்படுகிறது . சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன . திங்கள் , ஞாயிறு , மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது . அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது .

சொல்லும் பொருளும்

திங்கள் – நிலவு

கொங்கு – மகரந்தம்

அலர் – மலர்தல்

திகிரி – ஆணைச்சக்கரம்

பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்

மேரு – இமயமலை

நாமநீர் – அச்சம் தரும் கடல்

அளி -கருணை

கேள்விகள் மற்றும் பதில்கள்

கழுத்தில் சூடுவது ______

-தார்

கதிரவனின் மற்றொரு பெயர் ______

-ஞாயிறு

வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

 – வெண்மை + குடை

பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

-பொன் + கோட்டு

கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

– கொங்கலர்

அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

-அவனளிபோல்

காணி நிலம்

அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள் . ‘ வீடு ‘ என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார் . இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார் . இயற்கையைப் பலவகைகளிலும் போற்றிடும் பாரதியின் கனவு இல்லத்தைப் பற்றி அறிவோம் .

பாடல்

காணி நிலம் வேண்டும் – பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்குத்

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

 துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்திடையே -ஓர்

மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்குக்

கேணி அருகினிலே – தென்னைமரம்

கீற்றும் இளநீரும்

 பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

 பக்கத்திலே வேணும் – நல்ல

முத்துச் சுடர் போலே – நிலாவொளி

முன்பு வரவேணும் – அங்குக்

கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதில் படவேணும் – என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்

தென்றல் வரவேணும் .

– பாரதியார்

பாடலின் பொருள்

 காணி அளவு நிலம் வேண்டும் . அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும் . அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்கவேண்டும் . நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும் . இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும் .

அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும் . காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும் . உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் .

நூல் வெளி

 இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார் . அவரது இயற்பெயர் சுப்பிரமணியன் . இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர் . எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் . தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர் . மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர் . நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர் . பாஞ்சாலி சபதம் , கண்ணன் பாட்டு , குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார் . பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது .

 சொல்லும் பொருளும்

காணி – நில அளவைக் குறிக்கும் சொல்

 மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்

சித்தம் – உள்ளம் .

கேள்விகள் மற்றும் பதில்கள்

கிணறு என்பதைக் குறிக்கும் சொல் _____

-கேணி

சித்தம் என்பதன் பொருள்

-உள்ளம்

மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்

– சாளரம்

நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

– நன்மை + மாடங்கள்

நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

– நிலத்தின் + இடையே

முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

– முத்துச்சுடர்  

நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

– நிலவொளி

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: