விருந்தோம்பல், வயலும் வாழ்வும்

விருந்தோம்பல்

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘ விருந்தோம்பல் ‘ முதன்மையானதாகும் . தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன . கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி . அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம் .

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்  

– முன்றுறை அரையனார்

சொல்லும் பொருளும்

மாரி – மழை

மடமகள் – இளமகள்

வறந்திருந்த – வறண்டிருந்த

நல்கினாள் – கொடுத்தாள்

புகாவாக – உணவாக

முன்றில் – வீட்டின் முன் இடம் ( திண்ணை ) இங்கு வீட்டைக் குறிக்கிறது

பாடலின் பொருள்

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில் , பாரி மகளிரான அங்கவை , சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர் . பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர் . அதனால் , பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம் .

இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றுறா முன்றிலோ இல் என்பதாகும் . ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள் .

நூல் வெளி

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார் . இவர் கி.பி. ( பொ.ஆ . ) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர் . பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது .

பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . இது நானூறு பாடல்களைக் கொண்டது . ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது . இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

மரம் வளர்த்தால் பெறலாம் .

அ ) மாறி ஆ ) மாரி இ ) காரி ஈ ) பாரி

 ‘ நீருலையில் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) நீரு + உலையில் ஆ ) நீர் + இலையில் இ ) நீர் + உலையில் ஈ ) நீரு + இலையில்

மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) மாரியொன்று ஆ ) மாரிஒன்று இ ) மாரியின்று ஈ ) மாரியன்று

வயலும் வாழ்வும்

உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன . அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும் . நிலத்தைத் தெரிவு செய்தல் , நாற்றுப் பறித்தல் , நாற்று நடுதல் , நீர் பாய்ச்சுதல் , அறுவடை செய்தல் , போரடித்தல் , நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும் . இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம் .

ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ

ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி ஏலேலோ

சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி – ஏலேலங்கிடி ஏலேலோ

சேத்துக்குள்ளே இறங்குறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலே – ஏலேலங்கிடி ஏலேலோ

நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ

ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் – ஏலேலங்கிடி ஏலேலோ

ஓடியோடி நட்டோமையா – ஏலேலங்கிடி ஏலேலோ

மடமடன்னு மடைவழியே – ஏலேலங்கிடி ஏலேலோ

மண்குளிரத் தண்ணீர்பாய – ஏலேலங்கிடி ஏலேலோ

சாலுசாலாத் தாளுவிட்டு – ஏலேலங்கிடி ஏலேலோ

நாலுநாலா வளருதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ

மணிபோலப் பால்பிடித்து – ஏலேலங்கிடி ஏலேலோ

மனதையெல்லாம் மயக்குதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ

ஆளுபணம் கொடுத்துவாரான் – ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்து – ஏலேலங்கிடி ஏலேலோ

சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் – ஏலேலங்கிடி ஏலேலோ

கிழக்கத்தி மாடெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ

கீழே பார்த்து மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூரா – ஏலேலங்கிடி ஏலேலோ

கழலுதையா மணிமணியா – ஏலேலங்கிடி ஏலேலோ

தொகுப்பாசிரியர் – கி.வா. ஜகந்நாதன்

சொல்லும் பொருளும்

குழி – நில அளவைப்பெயர்

சீலை – புடவை

சாண் – நீட்டல் அளவைப்பெயர்

மடை – வயலுக்கு நீர் வரும் வழி

மணி – முற்றிய நெல்

கழலுதல் – உதிர்தல்

சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள்

பாடலின் பொருள்

உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர் . பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர் . நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர் .

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர் . நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர் . நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன . பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன . அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர் . அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர் . கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர் . மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன .

தெரிந்து தெளிவோம்

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர் . நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர் . இதற்குப் போரடித்தல் என்று பெயர் .

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது

செந்நெல்லென்று

ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான

தென்மதுரை

( நாட்டுப்புறப்பாடல் )

நூல் வெளி

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது . இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர் . பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார் . அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

உழவர் சேற்று வயலில் _____ நடுவர் .

 அ ) செடி ஆ ) பயிர் இ ) மரம் ஈ ) நாற்று

வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ____ செய்வர்

அ ) அறுவடை ஆ ) உழவு இ ) நடவு ஈ ) விற்பனை

 ‘ தேர்ந்தெடுத்து ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) தேர் + எடுத்து ஆ ) தேர்ந்து + தெடுத்து இ ) தேர்ந்தது + அடுத்து ஈ ) தேர்ந்து + எடுத்து

 ‘ ஓடை + எல்லாம் ‘ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .

அ ) ஓடைஎல்லாம் ஆ ) ஓடை யெல்லாம் இ ) ஓட்டையெல்லாம் ஈ ) ஓடெல்லாம்.

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: