விடுதலைத் திருநாள், ஒன்றே குலம்

விடுதலைத் திருநாள்

பிறந்தநாள் . திருமணநாள் போன்றன தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்களாகும் . சமயத் தொடர்பான விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் . இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் இன்றியமையா நாள் ஒன்றின் சிறப்பை அறிவோம் .

முன்னூறு வருடமாய்

முற்றுகை யிட்ட

அந்நிய இருட்டின்

அரக்கக் கூத்து

முடிந்தது என்று

முழங்கி நின்றது

எந்த நாளோ

அந்த நாள் இது .

செத்த பிணமாய்ச்

சீவனில் லாமல்

மொத்தமாய்த் தேசத்தை

முற்றுகையிட்ட

மூட மூட

நிர்மூட உறக்கத்தை

ஓட ஓட

விரட்டி யடித்து

விழிக்க வைத்தது

வையம்

வியக்க வைத்தது –

எந்த நாளோ

அந்த நாள் இது .

பரிதவித் திருந்த

பாரத அன்னை

காளியாய்ச் சீறிக்

கைவிலங் கொடித்து

பகையைத் துடைத்து

சத்திய நெஞ்சின்

சபதம் முடித்து

கூந்தல் முடித்துக்

குங்குமப் பொட்டு வைத்து

ஆனந்த தரிசனம்

அளித்து நின்றது

எந்த நாளோ

அந்த நாள்இது .

சதி வழக்கினிலே

சம்பந்தப் பட்டுத்

தூக்குக் கயிற்றில்

தொங்கப் போகும்

கடைசிக் கணத்திலும்

கண்முன் நிறுத்திப்

பகத்சிங் பார்த்துப்

பரவசப் பட்ட

அற்புத விடியலை

அழைத்து வந்தது

எந்த நாளோ

அந்த நாள் இது .

முற்றிப் படர்ந்த

முட்காட்டை எரித்து

விளைந்த மூங்கிலை

வீரமாய்த் துளைத்து

மூச்சுக் காற்றை

மோகித்து நுழைத்து

புரட்சிப்

புல்லாங் குழலில்

பூபாளம் இசைத்தது

எந்த நாளோ

அந்த நாள் இது .

இதந்தரும் இந்தச்

சுதந்திர நாளைச்

சொந்தம் கொண்டாடத்

தந்த பூமியைத்

தமிழால் வணங்குவோம் .

– மீரா

சொல்லும் பொருளும்

சீவன் – உயிர்

வையம் – உலகம்

சத்தியம் – உண்மை

சபதம் – சூளுரை

ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி

மோகித்து – விரும்பி

பாடலின் பொருள்

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று . உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று .

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து , அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு , இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று .

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங் , தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று . பகைமை என்னும் முள்காட்டினை அழித்து , அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று .

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம் .

நூல் வெளி

மீ . இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர் . அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் . ஊசிகள் , குக்கூ , மூன்றும் ஆறும் , வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் .

இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

வானில் முழுநிலவு அழகாகத் ___ அளித்தது .

அ ) தயவு ஆ ) தரிசனம் இ ) துணிவு ஈ ) தயக்கம்

இந்த _____முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு .

அ ) வையம் ஆ ) வானம் இ ) ஆழி ஈ ) கானகம்

‘ சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) சீவ + நில்லாமல் ஆ ) சீவன் + நில்லாமல் இ ) சீவன் + இல்லாமல் ஈ ) சீவ + இல்லாமல்

‘ விலங்கொடித்து ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) விலம் + கொடித்து ஆ ) விலம் + ஒடித்து இ ) விலன் + ஒடித்து ஈ ) விலங்கு + ஒடித்து

காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) காட்டைஎரித்து ஆ ) காட்டையெரித்து இ ) காடுஎரித்து ஈ ) காடுயெரித்து

இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) இதந்தரும் ஆ ) இதம்தரும் இ ) இதத்தரும் ஈ ) இதைத்தரும்

ஒன்றே குலம்

மனிதர்களிடையே பிறப்பால் உயர்வுதாழ்வு பாராட்டுவது தவறானது . உலகமக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும் . பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும் . அதுவே இறைத்தொண்டாகும் . இக்கருத்துகளை விளக்கும் திருமூலரின் பாடல்களை அறிவோம் .

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே

– திருமூலர்

சொல்லும் பொருளும்

நமன் – எமன்

நாணாமே – கூசாமல்

சித்தம் – உள்ளம்

உய்ம்மின் – ஈடேறுங்கள்

நம்பர் – அடியார்

ஈயில் – வழங்கினால்

படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

பாடலின் பொருள்

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர் . உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே . இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை . கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை . உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள் .

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது . அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும் .

நூல் வெளி

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர் . இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது . எனவே , இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர் . இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது .

திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ______க் கண்டு அஞ்சமாட்டார்கள் .

அ ) புலனை ஆ ) அறனை இ ) நமனை ஈ ) பலனை

ஒன்றே ______என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும் .

அ ) குலம் ஆ ) குளம் இ ) குணம் ஈ ) குடம்

 ‘ நமனில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) நம் + இல்லை ஆ ) நமது + இல்லை இ ) நமன் + நில்லை ஈ ) நமன் + இல்லை

நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) நம்பரங்கு ஆ ) நம்மார்க்கு இ ) நம்பர்க்கங்கு ஈ ) நம்பங்கு

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: