யசோதர காவியம், அக்கறை, குறுந்தொகை

யசோதர காவியம்

படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுவனவும் இலக்கியங்களே ! உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி அறம் சார்ந்த தனித்துவ இலக்கியங்கள் தமிழில் உள்ளன . அவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைப்பாதை உயர்வானது : அப்பாதையில் பயணித்தால் வாழ்க்கையை வளமாக்கலாம் . வாருங்கள் அறத்தேரின் வடம் பிடிப்போம் !

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே . * 1405

சொல்லும் பொருளும்

அறம் – நற்செயல் ;

வெகுளி- சினம் ;

ஞானம் – அறிவு ;

விரதம் – மேற்கொண்ட நன்னெறி .

பாடலின்பொருள்

நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும் ; நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்கவேண்டும் : ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும் ; இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும் .

 இலக்கணக் குறிப்பு

ஆக்குக , போக்குக , நோக்குக , – வியங்கோள் வினைமுற்றுகள்

பகுபத உறுப்பிலக்கணம்

போக்குக = போக்கு + க

போக்கு – பகுதி

க- வியங்கோள் வினைமுற்று விகுதி

நூல் வெளி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம் . இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும் . இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை . இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர் . யசோதர காவியம் , யசோதரன் ‘ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது . இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது ; பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர் .

அக்கறை

– கல்யாண்ஜி

உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார் . அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள் . அவ்வகையில் புதுக்கவிதையின் வரலாறு நூறு ஆண்டுகளை எட்டுகிறது எனலாம் . புதுக்கவிதைகள் மனித நேயத்தை நுழையும்முன் வலியுறுத்துவனவாக இருக்கின்றன . பரபரப்பான இந்நூற்றாண்டு வாழ்வின் நெருக்கடியில் மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் . கல்யாண்ஜி கவிதைகளிலும் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது .

 சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை

இலக்கணக் குறிப்பு

உருண்டது , போனது – ஒன்றன் பால் வினைமுற்றுகள்

சரிந்து – வினையெச்சம்

அனைவரும் – முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து = சரி + த் ( ந் ) + த் + உ ;

சரி – பகுதி ;

த் –சந்தி ( ந் ஆனது விகாரம் ) ;

த் – இறந்தகால இடை நிலை ;

உ – வினையெச்ச விகுதி ..

நூல் வெளி

கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம் ; சிறுகதை , கவிதை , கட்டுரை , புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர் . வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார் . புலரி , முன்பின் , ஆதி , அந்நியமற்ற நதி , மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில . இவை தவிர , அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது . பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு , ‘ சில இறகுகள் சில பறவைகள் ‘ என்ற பெயரில் வெளியானது . கலைக்க முடியாத ஒப்பனைகள் , தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் , உயரப் பறத்தல் , ஒளியிலே தெரிவது உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள் . ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது .

ஹைக்கூ

இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல் ?

. – அமுதோன்

பிம்பங்களற்ற தனிமையில்

ஒன்றிலொன்று முகம் பார்த்தன

சலூன் கண்ணாடிகள்

– நா . முத்துக்குமார்

வெட்டுக்கிளியின் சப்தத்தில்

மலையின் மௌனம்

ஒரு கணம் அசைந்து திரும்புகிறது 

– ஜப்பானியக் கவிஞர் பாஷோ

குறுந்தொகை

– பாலை பாடிய பெருங்கடுங்கோ

‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன . அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும் : அதன் சிறப்புக் கருதியே ‘ நல்ல குறுந்தொகை ‘ என்று அழைக்கப்படுகிறது ; குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுவன . தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் துடைக்கத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த ஒரு பாடல் மனிதத்தை உணர்த்துகிறது .

நசை பெரிது உடையர் ; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே . ( 37 )

பேரன்பு உடையவன் பெரிதுனக்குத் தருவான்

பொருள்தேடச் சென்றவன் பறந்தோடி வருவான்

பசித்தீ அணைக்க மெல்லிய யாமரக்

கிளையொடித்து உதவும் யானைக் காட்சியே

உன்நினைவு தூவி இங்கவனை அழைத்துவரும்

மலரினும் மெல்லியளே மனக்கவலை கொள்ளாதே

திணை : பாலை

துறை : தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது .

சொல்லும் பொருளும்

நசை – விருப்பம் ;

நல்கல் –வழங்குதல் ;

பிடி – பெண்யானை ;

வேழம் –ஆண்யானை ;

யா – ஒரு வகை மரம் ,பாலை நிலத்தில் வளர்வது ;

பொளிக்கும் –உரிக்கும் ;

ஆறு – வழி

பாடலின் பொருள்

தோழி தலைவியிடம் , ” தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன் . அவன் மீண்டும் வந்து அன்புடன் இருப்பான் . பொருள் ஈட்டுதற்காகப் பிரிந்து சென்ற வழியில் , பெண் யானையின் பசியைப் போக்க , பெரிய கைகளை உடைய ஆண்யானை , மெல்லிய கிளைகளை உடைய ‘ யா ‘ மரத்தின் பட்டையை உரித்து , அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிப்படுத்தும் “ ( அந்தக் காட்சியைத் தலைவனும் காண்பான் ; அக்காட்சி உன்னை அவனுக்கு நினைவுபடுத்தும் . எனவே , அவன் விரைந்து உன்னை நாடி வருவான் . வருந்தாது ஆற்றியிருப்பாயாக ) என்று கூறினாள் . இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது .

இலக்கணக் குறிப்பு

களைஇய – சொல்லிசை அளபெடை ,

பெருங்கை , மென்சினை – பண்புத் தொகைகள் ,

பொளிக்கும் – செய்யும் என்னும் வினைமுற்று ,

பிடிபசி – ஆறாம் வேற்றுமைத் தொகை ,

அன்பின – பலவின்பால் அஃறிணை வினைமுற்று ,

பகுபத உறுப்பிலக்கணம்

உடையர் = உடை + ய் + அர்

உடை – பகுதி

ய் – சந்தி ( உடம்படுமெய் )

அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

பொளிக்கும் = பொளி + க் + க் + உம்

பொளி –பகுதி

க் – சந்தி ;

க் – எதிர்கால இடைநிலை

உம் – வினைமுற்று விகுதி

நூல் வெளி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை . இது , தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது ; கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது . இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை . 1915 ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார் . நமக்குப் பாடமாக வந்துள்ளது 37 ஆவது பாடல் ஆகும் . இப்பாடலின் ஆசிரியர் ‘ பாலை பாடிய பெருங்கடுங்கோ ‘ . இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர் ; கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் ‘ பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார் . “

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: