மெய்ஞ்ஞான ஒளி, உயிர்க்குணங்கள்  

மெய்ஞ்ஞான ஒளி

எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் இயல்பு . இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனிதப் பண்பு . நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளனர் . ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி , அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம் . அவ்வாறு வாழ வேண்டிய முறைகளை விளக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களை அறிவோம் .

கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு

உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே !

காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே !

அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்

கரையறவே பொங்கும் கடலே பராபரமே !

அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே !

– குணங்குடி மஸ்தான் சாகிபு

சொல்லும் பொருளும்

பகராய் – தருவாய்

பராபரம் – மேலான பொருள் 

ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு

அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

பாடலின் பொருள்

மேலானபொருளே ! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே ! உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல் , பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன் .

நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய் . மேலானபொருளே ! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும் . அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக .

நூல் வெளி

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர் . இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார் . சதுரகிரி , புறாமலை , நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார் . எக்காளக் கண்ணி , மனோன்மணிக் கண்ணி , நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார் . நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .  

மனிதர்கள் தம் ____தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும் .        

அ ) ஐந்திணைகளை ஆ ) அறுசுவைகளை இ ) நாற்றிசைகளை  ஈ ) ஐம்பொறிகளை

ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம்

அ ) பகர்ந்தனர் ஆ ) நுகர்ந்தனர் இ ) சிறந்தனர் ஈ ) துறந்தனர்

‘ ஆனந்தவெள்ளம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) ஆனந்த + வெள்ளம் ஆ ) ஆனந்தன் + வெள்ளம் இ ) ஆனந்தம் + வெள்ளம் ஈ ) ஆனந்தர் + வெள்ளம்

உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  

அ ) உள்ளேயிருக்கும் ஆ ) உள்ளிருக்கும் இ ) உளிருக்கும் ஈ ) உளருக்கும்

உயிர்க்குணங்கள்  

ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன . அவற்றுள் நற்பண்புகளும் உண்டு ; தீய பண்புகளும் உண்டு . தீயனவற்றை விலக்கி , நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும் . மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பண்புகளைக் கன்னிப்பாவை என்னும் நூலின் பாடல்வழி அறிவோம் .

அறிவுஅருள் ஆசைஅச்சம்

அன்புஇரக்கம் வெகுளிநாணம்

நிறைஅழுக்காறு எளிமை

நினைவுதுணிவு இன்பதுன்பம்

பொறைமதம் கடைப்பிடிகள்

பொச்சாப்பு மானம் அறம்

வெறுப்புஉவப்பு ஊக்கம்மையல்

வென்றிஇகல் இளமைமூப்பு

மறவிஓர்ப்பு இன்னபிற

மன்னும் உயிர்க் குணங்கள்எல்லாம்

குறைவறப் பெற்றவள்நீ

குலமாதே பெண்ணரசி

இறைமகன் வந்திருக்க

இன்னும்நீ உறங்குதியோ

புறப்படு புன்னகைநீ

பூத்தேலோ ரெம்பாவாய் !

– இறையரசன்

சொல்லும் பொருளும்

நிறை – மேன்மை

பொச்சாப்பு – சோர்வு

மையல் – விருப்பம்

ஓர்ப்பு- ஆராய்ந்து தெளிதல்

பொறாமை – அழுக்காறு

இகல் – பகை

பொறை – பொறுமை

மதம் – கொள்கை

மன்னும் – நிலைபெற்ற

பாடலின் பொருள்

அறிவு , கருணை , ஆசை , அச்சம் , அன்பு , இரக்கம் , சினம் , நாணம் , மேன்மை , பொறாமை , எளிமை , நினைவு , துணிவு , இன்பம் , துன்பம் , பொறுமை , கொள்கையைப் பின்பற்றுதல் , சோர்வு , மானம் , அறம் , வெறுப்பு , மகிழ்ச்சி , ஊக்கம் , விருப்பம் , வெற்றி , பகை , இளமை , முதுமை , மறதி , ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும் . இவற்றையுடைய மனிதகுலத்தில் பிறந்த பெண்ணே ! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்தபின்னும் நீ உறங்கலாமா ? உண்மையை உணர , புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக !

தெரிந்து தெளிவோம்

 பாவை நூல்கள்

மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து , பிற பெண்களையும் எழுப்பிக்கொண்டு , ஆற்றுக்குச் சென்று நீராடி , இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு . இதனைப் பாவை நோன்பு என்பர் . அவ்வாறு திருமாலை வழியடச் செல்லும் பெண்கள் , பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை .

இதேபோலச் சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் , பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை . இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர் .

நூல் வெளி

இறையரசனின் இயற்பெயர் சே . சேசுராசா என்பதாகும் . கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர் . ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி , கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார் . அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது .

 திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க .

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண் ;

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் ,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் ! எழுந்திராய் , நாணாதாய் ! நாவுடையாய் !

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய் .

பாடல் -14

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது

அ ) உவகை ஆ ) நிறை இ ) அழுக்காறு ஈ ) இன்பம்

நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று ____

அ ) பொச்சாப்பு ஆ ) துணிவு இ ) மானம் ஈ ) எளிமை

‘ இன்பதுன்பம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது .

அ ) இன்பம் + துன்பு ஆ ) இன்பம் + துன்பம் இ ) இன்ப + அன்பம் ஈ ) இன்ப + அன்பு

குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) குணங்கள் எல்லாம் ஆ ) குணமெல்லாம் இ ) குணங்களில்லாம் ஈ ) குணங்களெல்லாம்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: