முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி

முத்தொள்ளாயிரம்

ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர் . பிற்காலக் காப்பியங்களில் நாட்டுவளம் தவறாது இடம்பெற்றது . முத்தொள்ளாயிரம் சேரன் , சோழன் , பாண்டியன் நுழையும்முன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது .

சேரநாடு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட ( து ) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு

பாடலின் பொருள்

சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன . அதைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன . அட்டா ! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே .

சொல்லும் பொருளும் :

அள்ளல் – சேறு ;

பழனம் – நீர் மிக்க வயல் ;

வெரீஇ – அஞ்சி ;

பார்ப்பு – குஞ்சு .

அணி – தற்குறிப்பேற்ற அணி

சோழநாடு

காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி

நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு .

பாடலின் பொருள்

நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை ‘ நாவலோ ‘ என்று கூவி அழைப்பர் . இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை ‘ நாவலோ ‘ என்று அழைப்பது போலிருந்தது . யானைப்படைகளை உடைய சோழனது நாடு , இத்தகு வளமும் வீரமும் மிக்கது .

சொல்லும் பொருளும்

 ‘ நாவலோ ‘ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து ;

இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல் .

அணி – உவமை அணி

பாண்டியநாடு

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு .

பாடலின் பொருள்

சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போலிருக்கின்றன . தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன . பந்தல் போட்டதுபோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன . முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது.

சொல்லும் பொருளும் :

நந்து – சங்கு ;

கமுகு – பாக்கு ,

முத்தம் – முத்து

அணி – உவமை அணி

இலக்கணக் குறிப்பு

வெண்குடை , இளங்கமுகு – பண்புத் தொகைகள்

கொல்யானை , குவிமொட்டு – வினைத்தொகைகள் .

வெரீஇ – சொல்லிசையளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

கொண்ட – கொள் ( ண் ) + ட் + அ

கொள் – பகுதி ( ண் ஆனது விகாரம் )

ட் – இறந்தகால இடைநிலை ;

அ – பெயரெச்ச விகுதி

நூல் வெளி

வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம் ; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர , சோழ , பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது . மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது . நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை . புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன . அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை . இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார் . சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது .

மதுரைக்காஞ்சி

-மாங்குடி மருதனார்

மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கின் , மதுரைக்காஞ்சி முதன்மையானது . இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம் , கோட்டை கொத்தளம் , அந்நகரில் நிகழும் திருவிழாக்கள் , பலவகைப் பள்ளிகள் , நாற்பெருங்குழு , அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன . காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வருணனைப் பாடல் இது .

மதுரை மாநகர்

மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்

விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை

தொல்வலி நிலைஇய , அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்குடை வாயில்

வகைபெற எழுந்து வானம் மூழ்கி

சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்

ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்

பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப

மாகால் எடுத்த முந்நீர் போல

முழங்கிசை நன்பணை அறைவனர் நுவல

கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை

மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து

 ( அடிகள் 351-365 )

மண்வரை ஆழ்ந்த தெளிந்த அகழி ,

விண்ணை முட்டும் கற்படை மதில்கள் ,

தொன்மை உடைய வலிமை மிக்க

தெய்வத் தன்மை பொருந்திய நெடுவாசல் ,

பூசிய நெய்யால் கறுத்த கதவுகள் ,

முகில்கள் உலவும் மலையொத்த மாடம் ,

வற்றாத வையைபோல் மக்கள் செல்லும் வாயில் ,

மாடம் கூடம் மண்டபம் எனப்பல

வகைபெற எழுந்து வானம் மூழ்கி

தென்றல் வீசும் சாளர இல்லம் ,

ஆற்றைப் போன்ற அகல்நெடும் தெருவில்

பலமொழி பேசுவோர் எழுப்பும் பேச்சொலி ,

பெருங்காற்று புகுந்த கடலொலி போல

விழாவின் நிகழ்வுகள் அறையும் முரசு ,

நீர்குடைந்ததுபோல் கருவிகளின் இன்னிசை ,

கேட்டோர் ஆடும் ஆரவார ஓசை ,

ஓவியம் போன்ற இருபெரும் கடைத் தெருக்கள் .

பாடலின் பொருள்

மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது . பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது . பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது . அவ்வாயில் நெய்பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது . மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன . இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வாயில்கள்வழிச் செல்கின்றனர் .

மண்டபம் , கூடம் , அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக்கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன . ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன . விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலிபோல் ஒலிக்கிறது . இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை , நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மைபோல எழுகிறது . அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர் . பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள்போலக் காட்சியளிக்கின்றன .

தெரியுமா ?

 பொறிமயிர் வாரணம் ….

கூட்டுறை வயமாப் புலியொடு குழும ( மதுரைக்காஞ்சி 673 – 677 அடிகள் ) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம் .

பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா . இராசமாணிக்கனார்

சொல்லும் பொருளும்

புரிசை – மதில் ;

அணங்கு – தெய்வம் ;

சில்காற்று – தென்றல் ;

புழை – சாளரம் ;

மாகால் – பெருங்காற்று ;

முந்நீர் – கடல் ;

கயம் – நீர்நிலை ;

பணை  – முரசு ;

ஓவு – ஓவியம் ;

நியமம் – அங்காடி .

பகுபத உறுப்பிலக்கணம்

ஆழ்ந்த – ஆழ் + த் ( ந் ) + த் + அ

ஆழ் –பகுதி ;

த் – சந்தி ( ந் ஆனது விகாரம் ) ;

த் – இறந்தகால இடைநிலை ;

அ – பெயரெச்ச விகுதி .

ஓங்கிய – ஓங்கு + இ ( ன் ) + ய் + அ

ஓங்கு – பகுதி ;

இ ( ன் ) – இறந்தகால இடைநிலை

ய் –உடம்படுமெய்

அ – பெயரெச்ச விகுதி

மகிழ்ந்தோர் – மகிழ் + த் ( ந் ) + த் + ஓர்

மகிழ் – பகுதி ;

த் – சந்தி ( ந் ஆனது விகாரம் ) ;

த் – இறந்தகால இடைநிலை ;

ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி

இலக்கணக் குறிப்பு

ஓங்கிய – பெயரெச்சம் ;

நிலைஇய – சொல்லிசை அளபெடை ;

குழாஅத்து – செய்யுளிசை அளபெடை ;

வாயில் – இலக்கணப் போலி .

மா கால் – உரிச்சொல் தொடர் ;

முழங்கிசை , இமிழிசை – வினைத்தொகைகள் .

நெடுநிலை , முந்நீர் – பண்புத் தொகைகள் ;

மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர் .

நூல் வெளி

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி . காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள் . மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது . இந்நூல் 782 அடிகளைக் கொண்டது . அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன . இதைப் ‘ பெருகுவள மதுரைக்காஞ்சி ‘ என்பர் . இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் . மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார் . திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் . எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: