மழைச்சோறு, படை வேழம்

மழைச்சோறு

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை . மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும் . நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் . அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர் . அத்தகைய வழிபாட்டின்போது பாடப்படும் பாடல் ஒன்றை அறிவோம் .

( மழை பொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடுகின்றனர் )

வாளியிலே மாக்க ரைச்சு

வாசலெல்லாம் கோலம் போட்டு

கோலம் கரைய வில்லை

கொள்ளை மழை பேயவில்லை

பானையிலே மாக்கரைச்சு

பாதையெலாம் கோலம் போட்டு

கோலங் கரையவில்லை

கொள்ளை மழை பேயவில்லை

கல்லு இல்லாக் காட்டிலதான்

கடலைச் செடிபோட்டு வச்சோம்

கடலைச் செடிவாட வாட ஒரு

கனத்த மழை பேயவில்லை

முள்ளு இல்லாக் காட்டுலதான்

முருங்கைச்செடி நட்டு வச்சோம்

முருங்கைச்செடி வாட வாட ஒரு

முத்துமழை பேயவில்லை

கருவேலங் காட்டுலதான்

கனமழையும் இல்லாமே

காட்டு மல்லியும் பூக்கலையே

காததூரம் மணக்கலையே

மானத்தை நம்பி நாங்க

மக்களைத் தான் பெற்றெடுத்தோம்

மானம் செய்த பாவமுங்க

மக்கள் பசி தீரலையே

காட்டுமல்லி வேலியிலே

கனமழையும் இல்லாமே

காட்டு மல்லியும் பூக்கலையே

காததூரம் மணக்கலையே

கலப்பைப் பிடிக்கும் தம்பி

கைசோர்ந்து நிக்குதம்மா !

ஏற்றம் இறைக்கும் தம்பி

ஏங்கி மனம் தவிக்குதம்மா !

( இவ்வாறு மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபாடு செய்கின்றனர் . அதன் பிறகும் மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர் . )

கண்மணியே பெண்டுகளே

கனத்த மழை பெய்யவில்லை

கதறி அழுது விட்டோம்

கடிமழையும் பெய்ய வில்லை

மண்ணு வறண்டும் நம்

மாரியாத்தா இரங்கலையே

வாடிகளா பெண்டுகளே – நாம்

வனவாசம் சென்றிடுவோம்

( இவ்வாறு பாடிக் கொண்டே சோறு வாங்கிய பானை , அகப்பை , பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரை விட்டு வெளியேற முனைகின்றனர் . அப்பொழுது மழை பெய்யத் தொடங்குகிறது . )

பேயுதைய்யா பேயுது

பேய்மழையும் பேயுது

ஊசிபோலக் காலிறங்கி

உலகமெங்கும் பேயுது

சிட்டுப் போல மின்னி மின்னி

சீமையெங்கும் பேயுது

சீமை யெங்கும் பேஞ்சமழை

செல்ல மழை பேயுது

தெரிந்து தெளிவோம்

மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் , சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர் . ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர் . கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை . இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர் .

நூல் வெளி

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது . இந்நூலின் பதிப்பாசிரியர் அ . கௌரன் .

சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக .  

கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் .

அ ) பெருமழை ஆ ) சிறு மழை இ ) எடைமிகுந்த மழை ஈ ) எடை குறைந்த மழை

‘ வாசலெல்லாம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வாசல் + எல்லாம் ஆ ) வாசல் + எலாம் இ ) வாசம் + எல்லாம் ஈ ) வாசு + எல்லாம்

‘ பெற்றெடுத்தோம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) பெறு + எடுத்தோம் ஆ ) பேறு + எடுத்தோம் இ ) பெற்ற + எடுத்தோம் ஈ ) பெற்று + எடுத்தோம்

கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) கால்லிறங்கி ஆ ) காலிறங்கி இ ) கால் இறங்கி ஈ ) கால்றங்கி

படை வேழம்

தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது அவர்தம் வீரமும் உடைமைகளாகக்கொண்டவர்கள் . போர்அறமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை . பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பினை நமக்கு உணர்த்துவன . அதனைப் போற்றிப் பாடும் சிற்றிலக்கியமான கலிங்கத்துப்பரணியின் பாடல்கள் சிலவற்றை அறிவோம் .

கலிங்கப் படையின் நடுக்கம்

எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை

அதுகொல் என அலறா இரிந்தனர்

அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே ( 1 )

கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல்

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி

மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

இருவர் ஒருவழி போகல் இன்றியே ( 2 )

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்

உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா இறைஞ்சினர்

அபயம் அபயம் எனநடுங்கியே ( 3 )

மழைகள் அதிர்வன போல் உடன்றன

வளவன் விடுபடை வேழம் என்றிருள்

முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்

முதுகு செயும்உப காரம் என்பரே ( 4 )

-செயங்கொண்டார்

சொல்லும் பொருளும்

மறலி – காலன்

வழிவர் – நழுவி ஓடுவர்

கரி – யானை

பிலம் – மலைக்குகை

தூறு – புதர்

மண்டுதல் – நெருங்குதல்

அருவர் – தமிழர்

இறைஞ்சினர் – வணங்கினர்

உடன்றன – சினந்து எழுந்தன

முழை – மலைக்குகை

பாடலின் பொருள்

சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர் , இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர் . தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர் . சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர் ; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி , அலைந்து குலைந்து நடுங்கினர் .

அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர் . சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர் . சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர் . எத்திசையில் செல்வது எனத் தெரியாமல் , செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர் .

கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர் . தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர் ; தஞ்சம் வேண்டி வணங்கினர் .

சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின ; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர் ; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர் .

நூல் வெளி

செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர் . இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் . இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார் .

கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல் . தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும் . இது முதலாம் குலோத்துங்க சோழன் , அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது . இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார் . கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது ; 599 தாழிசைகள் கொண்டது .

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும் .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .  

சிங்கம் ____யில் வாழும் .

அ ) மாயை ஆ ) ஊழி  இ ) முழை ஈ ) அலை

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு

அ ) வீரம் ஆ) அச்சம் இ ) நாணம் ஈ ) மகிழ்ச்சி

‘ வெங்கரி ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வெம் + கரி ஆ ) வெம்மை + கரி இ ) வெண் + கரி  ஈ ) வெங் + கரி

‘ என்றிருள் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) என் + இருள் ஆ ) எட்டு + இருள் இ ) என்ற + இருள் ஈ ) என்று + இருள்

போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .

அ ) போன்றன ஆ ) போலன்றன இ ) போலுடன்றன ஈ ) போல்உடன்றன

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: