மலைப்பொழிவு

மலைப்பொழிவு

உலக மக்கள் சாதி , மதம் , மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர் . இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன . எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும் . இவ்வுண்மைகளை இயேசு காவியம் வழி அறிவோம்

சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர்என்றார் !

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான்என்றார் – அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார்என்றார் !

சாதிகளாலும் பேதங்களாலும்

தள்ளாடும் உலகம் – அது

தர்மம் ஒன்றை நம்பிய பிறகே

அடங்கிவிடும் கலகம் !

ஓதும் பொருளாதாரம் தனிலும்

உன்னத அறம்வேண்டும்- புவி

உயர்வும் தாழ்வும் இல்லா தான

வாழ்வினைப் பெறவேண்டும் .

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என

இயேசுபிரான் சொன்னார் – அவர்

இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர்

இதுதான் பரிசுஎன்றார்

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம் !

தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்

சண்டை சச்சரவு-  தினம்

தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும்

பேசும் பொய்யுறவு !

‘ இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி

எத்தனை வீண்கனவு – தினம்

இவை இல்லாது அமைதிகள் செய்தால்

இதயம் மலையளவு !

 – கண்ணதாசன்

சொல்லும் பொருளும்

சாந்தம் – அமைதி

மகத்துவம் – சிறப்பு

பேதங்கள் – வேறுபாடுகள்

தாரணி – உலகம்

தத்துவம் – உண்மை

இரக்கம் – கருணை

பாடலின் பொருள்

( தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார் . )

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள் . இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது . அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார் . மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை . அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார் .

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது . அறம் என்கிற ஒன்றனை நம்பியபிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும் . பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும் . இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும் .

இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர் . அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர் . இதுதான் அவர்களுக்கான பரிசு . மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும் . அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும் .

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர் . மேலும் அவர்கள் தன்னாடு என்றும் , பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர் .

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன . இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும் .

நூல் வெளி

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா . இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார் . காவியங்கள் , கவிதைகள் , கட்டுரைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் , புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் . ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார் . இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார் .

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும் . இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது

அ ) பணம் ஆ ) பொறுமை இ ) புகழ் ஈ ) வீடு

சாந்த குணம் உடையவர்கள் ___ முழுவதையும் பெறுவர் .

அ ) புத்தகம் ஆ ) செல்வம் இ ) உலகம் ஈ ) துன்பம்

‘ மலையளவு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) மலை + யளவு ஆ ) மலை + அளவு இ ) மலையின் + அளவு ஈ ) மலையில் + அளவு

‘ தன்னாடு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) தன் + னாடு ஆ ) தன்மை + னாடு இ ) தன் + நாடு ஈ ) தன்மை + நாடு

இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) இவையில்லாது ஆ ) இவைஇல்லாது இ ) இவயில்லாது ஈ ) இவஇல்லாது

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: