பெருமாள் திருமொழி – பரிபாடல்

பெருமாள் திருமொழி

– குலசேகராழ்வார்

தமிழர் , பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள் . அதன்விளைவாக , சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன . அதற்கு இணையாகப் பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துகள் செறிந்திருக்கின்றன .

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே .

பாசுர எண் : 691

பாடலின் பொருள்

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார் . வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே ! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன் .

சொல்லும் பொருளும்

சுடினும் – சுட்டாலும் ,

மாளாத – தீராத ,

மாயம் – விளையாட்டு

வித்துவக்கோடு என்னும் ஊர் , கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது . குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார் .

நூல் வெளி

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691 ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது . பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது . இதில் 105 பாடல்கள் உள்ளன . இதனைப் பாடியவர் குலசேகராழ்வார் . இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு .

பரிபாடல்

– கீரந்தையார்

இலக்கியங்கள் தாம் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம் , பண்பாடு மட்டுமல்லாமல் அக்காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தாங்கி அமைகின்றன . நுழையும்முன் அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்க விதைகளைப் பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்கமுடிகிறது . மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல் , துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் துளிர்த்திருக்கும் அறிவியல் கருத்துகள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப்போவதைக் காண்கையில் பெருவியப்பு மேலிடுகிறது . புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை அன்றே காட்டிய பழங்கவிதை வியப்பிலும் வியப்பே !

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி ,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் ;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

செந்தீச் சுடரிய ஊழியும் ; பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும் ; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு ,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் …

பா.எண் . 2 : 4-12

பாடலின் பொருள்

எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு ( பரமாணு ) பேரொலியுடன் தோன்றியது . உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது . அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன . பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது . பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது . அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது . மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில் , உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது . அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது .

சொல்லும் பொருளும்

விசும்பு – வானம்

ஊழி – யுகம்

ஊழ் – முறை

தண்பெயல் – குளிர்ந்த மழை

ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

பீடு – சிறப்பு

ஈண்டி –செறிந்து திரண்டு

இலக்கணக் குறிப்பு

ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்

வளர்வானம் – வினைத்தொகை

செந்தீ – பண்புத்தொகை

வாரா ( ஒன்றன் ) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

கிளர்ந்த – கிளர் + த் ( ந் ) + த் + அ

கிளர்- பகுதி

த் – சந்தி

( த்  ) – ந் ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

இல்நுழைகதிர்

இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன . வெளியே நின்று பார்த்தோமெனில் , சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும் . அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார் . 1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார் …

” அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

……

…….

சிறிய ஆகப் பெரியோன் தெரியின் ” ( திருவாசகம் 3 -1-6 )

அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும் , ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின் , அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன . இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல அவை நுண்மையாக இருக்கின்றன .

நூல் வெளி

பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும் . பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார் . இந்நூல் ” ஓங்கு பரிபாடல் “ எனும் புகழுடையது . இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் . உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர் . இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன .

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை , சமூக உறவு அறிவாற்றல் , இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: