புலி தங்கிய குகை

புலி தங்கிய குகை

தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர் . நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர் . கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செய்தியை அறிவோம் .

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஒரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

– காவற்பெண்டு

கவிநடை உரை

எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று

என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே !

அவனிருக்கும் இடம் யானறியேன் ;

புலி தங்கிச் சென்ற குகை போல

அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது ;

ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் !

சொல்லும் பொருளும்

சிற்றில் – சிறு வீடு

யாண்டு – எங்கே

கல் அளை – கற்குகை

ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

பாடலின் பொருள்

( சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று , ‘ அன்னையே ! உன் மகன் எங்கு உள்ளான் ? ‘ என்று கேட்டாள் . )

‘ சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு , ஏதும் அறியாதவள் போல நீ ” உன் மகன் எங்கே ? ” என என்னைக் கேட்கிறாய் . அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை . ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது . அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும் . போய்க் காண்பாயாக ‘ என்று புலவர் பதிலளித்தார் .

நூல் வெளி

காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர் . சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர் . கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர் , சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார் . இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது .

புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று . இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை , நாகரிகம் , பண்பாடு , வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது . இந்நூலில் 86 – ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

 ‘ யாண்டு என்னும் சொல்லின் பொருள்

அ ) எனது ஆ ) எங்கு இ ) எவ்வளவு ஈ ) எது  

‘ யாண்டுளனோ ? ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) யாண்டு + உளனோ ? ஆ ) யாண் + உளனோ ? இ ) யா + உளனோ ? ஈ ) யாண்டு + உனோ ?

‘ கல் + அளை ‘ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) கல்லளை ஆ ) கல்அளை இ ) கலலளை ஈ ) கல்லுளை

பாஞ்சை வளம்

தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன . அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும் . அது சமூகக்கதைப் பாடல் , வரலாற்றுக்கதைப் பாடல் , புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும் . வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் கதைப்பாடலின் ஒரு பகுதியை அறிவோம் .

சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை

துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் – பாஞ்சைக்

கோட்டை வளங்களைக் கேளுமையா

கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் – மதில்

கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்

வீட்டிலுயர் மணிமேடைகளாம் – மெத்தை

வீடுகளா மதிலோடை களாம்

பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் – பணப்

பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்

ஆசார வாசல் அலங்காரம் – துரை

ராசன் கட்டபொம்மு சிங்காரம்

ராசாதி ராசன் அரண்மனையில் – பாஞ்சை

நாட்டரசன் கொலுவீற்றிருந்தான் .

விந்தையாகத் தெருவீதிகளும் – வெகு

விஸ்தாரமாய்க் கடை வாசல்களும்

நந்தவனங்களும் சந்தனச் சோலையும் – அங்கே

நதியும் செந்நெல் கமுகுகளும் ,

வாரணச் சாலை ஒருபுறமாம் – பரி

வளரும் சாலை ஒருபுறமாம்

தோரண மேடை ஒருபுறமாம் – தெருச்

சொக்கட்டான் சாரியல்ஒர் புறமாம்

சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் – வளம்

சொல்லி மயில் விளையாடிடுமாம்

அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் – சில

அதிசயம் சொல்கிறேன் கேளுமையா

முயலும் நாயை விரட்டிடுமாம் – நல்ல

முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே

பசுவும் புலியும் ஒரு துறையில் – வந்து

பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும் .

கறந்த பாலையுங் காகங் குடியாது – எங்கள்

கட்டபொம்மு துரை பேரு சொன்னால்

வரந்தருவாளே சக்க தேவி – திரு

வாக்கருள் செய்வாளே சக்க தேவி

சொல்லும் பொருளும்

சூரன் – வீரன்

பொக்கிஷம் – செல்வம்

சாஸ்தி – மிகுதி

விஸ்தாரம் – பெரும்பரப்பு

வாரணம் – யானை

பரி – குதிரை

சிங்காரம் – அழகு

கமுகு – பாக்கு

பாடலின் பொருள்

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன் .

அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள் . அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும் . அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும் .

வீடுகள்தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும் . வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும் . வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும் .

அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும் . அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான் .

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும் . பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும் .

யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும் . தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும் .

சோலைகளில் குயில்கள் கூவும் . மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும் . அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன் .

வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும் . பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும் .

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது .

சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள் .

நூல் வெளி

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன . அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன . நம் பாடப்பகுதி நா . வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது .

.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

ஊர்வலத்தின் முன்னால்____ அசைந்து வந்தது .

 அ ) தோரணம் ஆ ) வானரம் இ ) வாரணம் ஈ ) சந்தனம்

பாஞ்சாலங்குறிச்சியில் ____நாயை விரட்டிடும் ,

அ ) முயல் ஆ ) நரி இ ) பரி ஈ ) புலி

மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது

அ ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு ஆ ) படுக்கையறை உள்ள வீடு  இ ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு  ஈ ) மாடி வீடு

‘ பூட்டுங்கதவுகள் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) பூட்டு + கதவுகள் ஆ ) பூட்டும் + கதவுகள் இ ) பூட்டின் + கதவுகள் ஈ ) பூட்டிய + கதவுகள்

 ‘ தோரணமேடை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) தோரணம் + மேடை ஆ ) தோரண + மேடை இ ) தோரணம் + ஓடை ஈ ) தோரணம் + ஓடை

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) வாசல்அலங்காரம் ஆ ) வாசலங்காரம் இ ) வாசலலங்காரம் ஈ ) வாசலிங்காரம்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: