புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர்

புதுமை விளக்கு

உள்ளத்தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு . இறைவழிபாட்டில் சடங்குகளைவிட உள்ளத் தூய்மையே முதன்மையானது . இயற்கையையும் தம் உள்ளத்து அன்பையும் விளக்காக ஏற்றி வழிபட்ட சான்றோர்களின் பாடல்களைக் கற்று மகிழ்வோம் .

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று “

– பொய்கையாழ்வார்

சொல்லும் பொருளும்

வையம் – உலகம்

வெய்ய – வெப்பக்கதிர் வீசும்

இடர்ஆழி – துன்பக்கடல்

சொல்மாலை – பாமாலை

சுடர்ஆழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

பாடலின் பொருள்

பூமியை அகல்விளக்காகவும் , ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும் , வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால் . சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன் .

நூல் வெளி

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர் . நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும் . அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது .

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்

– பூதத்தாழ்வார்

சொல்லும் பொருளும்

தகளி – அகல்விளக்கு

நாரணன் – திருமால்

ஞானம் – அறிவு

பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும் , ஆர்வத்தையே நெய்யாகவும் , இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு , ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன் .

நூல் வெளி

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர் . இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார் . நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும் .

தெரிந்து தெளிவோம்

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ . அசையோ , சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர் . ( அந்தம் – முடிவு , ஆதி முதல் ) .

இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும் .

தெரிந்து தெளிவோம்

திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் . அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும் . இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார் .

பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார் . பூதத்தாழ்வார் , பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர் .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

‘ இடர் ஆழி நீங்குகவே ” – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ ) துன்பம் ஆ ) மகிழ்ச்சி இ ) ஆர்வம் ஈ ) இன்பம்

 ‘ ஞானச்சுடர் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) ஞான + சுடர் ஆ ) ஞானச் + சுடர் இ ) ஞானம் + சுடர் ஈ ) ஞானி + சுடர்

இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) இன்பு உருகு ஆ ) இன்பும் உருகு இ ) இன்புருகு ஈ ) இன்பருகு

அறம் என்னும் கதிர்

இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும் . இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் . அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும் . அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றனை அறிவோம் .

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய் “

– முனைப்பாடியார்

சொல்லும் பொருளும்

வித்து – விதை

களை – வேண்டாத செடி

ஈன – பெற

பைங்கூழ் –  பசுமையான பயிர்

நிலன் – நிலம்

வன்சொல் – கடுஞ்சொல்

பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும் . அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும் . வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும் . உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும் . அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும் . இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும் .

நூல் வெளி

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர் . இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு .

இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது . அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது . இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

காந்தியடிகள் எப்போதும் ______ ப் பேசினார்

அ ) வன்சொற்களை ஆ ) அரசியலை இ ) கதைகளை ஈ ) வாய்மையை

 ‘ இன்சொல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) இனிய + சொல் ஆ ) இன்மை + சொல் இ ) இனிமை + சொல் ஈ ) இன் + சொல்

அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) அறகதிர் ஆ ) அறுகதிர் இ ) அறக்கதிர் ஈ ) அறம்கதிர்

‘ இளமை ‘ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

அ ) முதுமை ஆ ) புதுமை இ ) தனிமை ஈ ) இனிமை

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: