பாடறிந்து ஒழுகுதல், வளம் பெருகுக

பாடறிந்து ஒழுகுதல்

அன்பு , அறிவு , பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர்குணங்கள் ஆகும் . இச்சொற்களின் பொருளை மேலோட்டமாக அனைவரும் அறிவர் . ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் நுட்பமான பொருள் உண்டு . அதனை விளக்கும் கலித்தொகைப் பாடல் ஒன்றை அறிவோம் .

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்  

சொல்லும் பொருளும்

அலந்தவர் – வறியவர்

கிளை – உறவினர்

பேதையார் – அறிவற்றவர்

செறாஅமை – வெறுக்காமை

நோன்றல் –  பொறுத்தல்

மறாஅமை – மறவாமை

போற்றார் – பகைவர்

பொறை –  பொறுமை

பாடலின் பொருள்

இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் . பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் . பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் . அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் . அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல் . செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல் . நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் . நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் . பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் . நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும் .

நூல் வெளி

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று . இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல் ; நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது . குறிஞ்சிக்கலி , முல்லைக்கலி , மருதக்கலி , நெய்தற்கலி , பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது . கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் . நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

பசியால் வாடும் __உணவளித்தல் நமது கடமை .

அ ) பிரிந்தவர்க்கு ஆ ) அலந்தவர்க்கு இ ) சிறந்தவர்க்கு ஈ ) உயர்ந்தவருக்கு

நம்மை ____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும் .

அ ) இகழ்வாரை ஆ ) அகழ்வாரை இ ) புகழ்வாரை ஈ ) மகிழ்வாரை

மறைபொருளைக் காத்தல்___ எனப்படும் .

அ ) சிறை ஆ ) அறை இ ) கறை ஈ ) நிறை

 ‘ பாடறிந்து ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) பாட் + அறிந்து ஆ ) பா + அறிந்து இ ) பாடு + அறிந்து ஈ ) பாட்டு + அறிந்து  

முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) முறையப்படுவது ஆ ) முறையெனப்படுவது இ ) முறை எனப்படுவது ஈ ) முறைப்படுவது

வளம் பெருகுக

மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு . மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது . வளமான வான்மழையால் பயிர்கள் செழித்து உழவர் பெருமக்கள் உவக்கும் காட்சி ஒன்றைத் தகடூர் யாத்திரைப் பாடலில் காண்போம் .

பெருநீரால் வாரி சிறக்க ! இருநிலத்து

இட்ட வித்து எஞ்சாமை நாறுக ! நாறார

முட்டாது வந்து மழை பெய்க ! பெய்தபின்

ஒட்டாது வந்து கிளைபயில்க ! அக்கிளை

பால்வார் பிறைஞ்சிக் கதிரீன ! அக்கதிர்

ஏர்கெழு செல்வர் களம்நிறைக ! அக்களத்துப்

போரெல்லாங் காவாது வைகுக ! போரின்

உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு

நாரை பிரியும் விளைவயல்

யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே !

சொல்லும் பொருளும்

வாரி – வருவாய்

வைகுக – தங்குக

எஞ்சாமை –குறைவின்றி

ஓதை – ஓசை

முட்டாது – தட்டுப்பாடின்றி

வெரீஇ – அஞ்சி

ஒட்டாது – வாட்டம் இன்றி

யாணர் – புதுவருவாய்

பாடலின் பொருள்

சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக . அகன்ற நிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக . முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிக . தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க . கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈனுக . அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக . அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக . போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் . நுழையும்முன் காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண்பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக .

நூல் வெளி

ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை . தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது . இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை . இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .  

தோட்டத்தில் தம்பி ஊன்றிய எல்லாம் முளைத்தன .

அ ) சத்துகள் ஆ ) பித்துகள் இ ) முத்துகள்  ஈ ) வித்துகள்

என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ____ பெருகிற்று .

அ ) காரி ஆ ) ஓரி இ ) வாரி ஈ ) பாரி

 ‘ அக்களத்து ‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) அ + களத்து ஆ ) அக் + களத்து இ ) அக்க + அளத்து ஈ ) அம் + களத்து

 கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) கதிரென கதியீன இ ) கதிரீன ஈ ) கதிரின்ன

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: