நோயும் மருந்தும், வருமுன் காப்போம்

நோயும் மருந்தும்

மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள் . உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர் . அந்நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை இலக்கியங்கள் விளக்குகின்றன . அத்தகைய கருத்துகளை விளக்கும் நீலகேசிப் பாடல்களை அறிவோம் .

தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்

ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்

யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா

நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்  

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்து பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே

சொல்லும் பொருளும்

தீர்வன – நீங்குபவை

திறத்தன – தன்மையுடையன

உவசமம் – அடங்கி இருத்தல்

கூற்றவா – பிரிவுகளாக

நிழல்இகழும் – ஒளிபொருந்திய

பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே

பேர்தற்கு – அகற்றுவதற்கு

பிணி – துன்பம்

திரியோகமருந்து – மூன்று யோகமருந்து

ஓர்தல் – நல்லறிவு

தெளிவு – நற்காட்சி

பிறவார் – பிறக்கமாட்டார்

பாடலின் பொருள்

ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே ! நோயின் தன்மைபற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக . மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை . எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை . அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை . இயல் மூன்று

அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும் . இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று . நல்லறிவு , நற்காட்சி , நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள் . இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர் .

நூல் வெளி

நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று . இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது . கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது . சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . நீலகேசிக் காப்பியத்தின் தருவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன .

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

 உடல்நலம் என்பது இல்லாமல் வாழ்தல் ஆகும் .

அ ) அணி ஆ ) பணி இ ) பிணி ஈ ) மணி

நீலகேசி கூறும் நோயின் வகைகள்___

 அ ) இரண்டு ஆ ) மூன்று இ ) நான்கு ஈ ) ஐந்து

 ‘ இவையுண்டார் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) இ + யுண்டார் ஆ ) இவ் + உண்டார் இ ) இவை + உண்டார் ஈ ) இவை + யுண்டார்

தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) தாம்இனி ஆ ) தாம்மினிஇ ) தாமினி ஈ ) தாமனி

வருமுன் காப்போம்

‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்பது பழமொழி . நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை . நல்ல உணவு , உடல்தூய்மை , உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை . இவற்றை விளக்கும் பாடல் ஒன்றை அறிவோம்

உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்

இடமும் பொருளும் நோயாளிக்கு

இனிய வாழ்வு தந்திடுமோ ?

சுத்தமுள்ள இடமெங்கும்

சுகமும் உண்டு நீ அதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

நீண்ட ஆயுள் பெறுவாயே .

காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே !

கூழை யேநீ குடித்தாலும்

குளித்த பிறகு குடியப்பா

ஏழை யேநீ ஆனாலும் ,

இரவில் நன்றாய் உறங்கப்பா !

மட்டுக் குணவை உண்ணாமல்

வாரி வாரித் தின்பாயேல்

திட்டு முட்டுப் பட்டிடுவாய் !

தினமும் பாயில் விழுந்திடுவாய் !

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்த பின்உணவும்

நோயை ஓட்டி விடும்அப்பா !

நூறு வயதும் தரும்அப்பா !

அருமை உடலின் நலமெல்லாம்

அடையும் வழிகள் அறிவாயே !

வருமுன் நோயைக் காப்பாயே !

வையம் புகழ வாழ்வாயே !

– கவிமணி தேசிகவிநாயகனார்

சொல்லும் பொருளும்

நித்தம் நித்தம் – நாள்தோறும்

வையம் – உலகம்

மட்டு – அளவு

பேணுவையேல் – பாதுகாத்தால்

திட்டுமுட்டு – தடுமாற்றம்

சுண்ட – நன்கு

பாடலின் பொருள்

உடலில் உறுதி கொண்டவரே , உலகில் மகிழ்ச்சி உடையவராவார் . உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது . சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு . நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம் .

காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு , நல்லகாற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது . அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான் . எனவே , நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும் ! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும் .

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள் . தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும் ! நூறாண்டு வாழ வைக்கும் . அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக ! ஆகவே நோய் வருமுன் காப்போம் ! உலகம் புகழ வாழ்வோம் !.

நூல் வெளி

கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார் , குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர் ; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் ; இவர் , ஆசியஜோதி , மருமக்கள் வழி மான்மியம் , கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார் .

மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

காந்தியடிகள் போற்ற வாழ்ந்தார் .

அ ) நிலம் ஆ ) வையம் இ ) களம் ஈ ) வானம்

‘ நலமெல்லாம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) நலம் + எல்லாம் ஆ ) நலன் + எல்லாம் இ ) நலம் + எலாம் ஈ ) நலன் + எலாம்

இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_

அ ) இடவெங்கும் ஆ ) இடம்எங்கும் இ ) இடமெங்கும் ஈ ) இடம்மெங்கும்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: