நீதிவெண்பா – திருவிளையாடற்புராணம் – பூத்தொடுத்தல் – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

நீதிவெண்பா

– கா.ப.செய்குதம்பிப் பாவலர்

கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது சங்க இலக்கியம் , தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள் . கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம்வரை தொடர்கின்றனர் தமிழர் . பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல , நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும் .

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

பாடலின் பொருள்

அருளினைப் பெருக்கி . அறிவைச் சீராக்கி , மயக்கம் அகற்றி . அறிவுக்குத் தெளிவு தந்து , உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும் . எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும் .

சதாவதானம்

‘ ‘ சதம் ‘ என்றால் நூறு என்று பொருள் . ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் .

நூல் வெளி

‘ சதாவதானம் ‘ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் ( 1874 – 1950 ) , கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் ; பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர் ; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் ; 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘ சதாவதானி ‘ என்று பாராட்டுப்பெற்றார் . இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன . இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன .

திருவிளையாடற்புராணம்

-பரஞ்சோதி முனிவர்

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புச் செய்வது தமிழ்கூறும் நல்லுலகம் . அரசரும் புலவருக்குக் கவரி வீசுவர் ; கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களைப் புலவருக்குக் கொடை கொடுத்து மகிழ்வர் ; இறைவனும் அறிவைப் போற்றுபவன் ; அறிவாய் நிற்பவன் ; அறிவிற் சிறந்த புலவருக்காகத் தூது சென்றவன் ; புலவரது அறிவுப் பெருமையை உணர்த்துபவன் .

காண்டம் : திரு ஆலவாய்க் காண்டம் ( 3 )

படலம் : இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் ( 56 )

படலச் சுருக்கம்

பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேசபாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான் . கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் , தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட , அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான் . மனம் வருந்திய இடைக்காடனார் . இறைவனிடம் முறையிட்டார் . மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி , வடதிருஆலவாயில் சென்று தங்கினார் . இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி , இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான் . இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார் .

இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல்

கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்

பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்

மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்

வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல் . ( 2615 )

சொல்லும் பொருளும்

கேள்வியினான் – நூல் வல்லான்

கேண்மையினான் – நட்பினன்

பூத்தொடுத்தல்

-உமா மகேஸ்வரி

கலைகள் மனித வாழ்விற்கு அழகூட்டுபவை . அழகியல் , மண்ணுயிர்கள் அனைத்தையும் தம் வாழ்வியல் சூழலுடன் பிணைத்துக் கொண்டுள்ளது . தத்தித் தாவும் குழந்தை முதல் தள்ளாடும் முதியவர் வரை யாவரும் அழகுணர்ச்சி மிக்கவர்களே ! நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவிலும் அழகு சிரிப்பதை அடையாளம் காணுகிறார் கவிஞர் ஒருவர் .

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி ?

சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்

இறுக்கி முடிச்சிட்டால்

காம்புகளின் கழுத்து முறியும் .

தளரப் பிணைத்தால்

மலர்கள் தரையில் நழுவும் .

வாசலில் மரணம் நிற்பதறிந்தும்

வருந்தாமல் சிரிக்கும்

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்-

ஒருவேளை ,

என் மனமே நூலாகும்

நுண்மையுற்றாலொழிய .

நூல் வெளி

கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர் . தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார் . இவர் , நட்சத்திரங்களின் நடுவே , வெறும் பொழுது , கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார் ; கவிதை , சிறுகதை , புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார் .

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

-குமரகுருபரர்

சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும் ; கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும் . தொடக்கம் முதல் தமிழிலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய , இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன.ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது நாட்டுப்புறத்தமிழ் ! குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது பிள்ளைத்தமிழ் !

ஆடுக செங்கீரை !

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞா ண்ரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ எத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

செங்கீரைப் பருவம் , பா.எண்.ச

பாடலின் பொருள்

திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும் . இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும் . பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும் . பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும் . கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும் . உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும் . தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே ! செங்கீரை ஆடி அருள்க ! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட , செங்கீரை ஆடுக .

 இலக்கணக்குறிப்பு :

குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை

ஆடுக- வியங்கோள் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம் :

பதிந்து – பதி + த் ( ந் ) + த் + உ ;

பதி – பகுதி

த் – சந்தி ( ந் – ஆனது விகாரம் )

த் – இறந்தகால இடைநிலை

உ -வினையெச்ச விகுதி

செங்கீரைப் பருவம்

செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும் . இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர் . இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி , ஒருகாலினை மடக்கி . மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும் .

அணிகலன்கள்

சிலம்பு , கிண்கிணி – காலில் அணிவது

அரைநாண் – இடையில் அணிவது

சுட்டி – நெற்றியில் அணிவது

குண்டலம் , குழை – காதில் அணிவது

சூழி – தலையில் அணிவது

நூல் வெளி

குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது . 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ் . இதில் இறைவனையோ , தலைவரையோ , அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு , அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர் . பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ் . பத்துப் பருவங்கள் அமைத்து , பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும் . இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் , பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும் . குமரகுருபரரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு இவர் தமிழ் , வடமொழி , இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர் ; கந்தர் கலிவெண்பா , மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் , மதுரைக்கலம்பகம் , சகலகலாவல்லிமாலை , நீதிநெறி விளக்கம் , திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார் .

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி .

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் ( கடைசி மூன்று பருவம் ) – சிற்றில் , சிறுபறை , சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ் ( கடைசி மூன்று பருவம் ) – கழங்கு , அம்மானை , ஊசல்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: