நாச்சியார் திருமொழி, சீவக சிந்தாமணி

நாச்சியார் திருமொழி

 -ஆண்டாள்

பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது . இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது . இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது . இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது . ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர் . அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் கவிதைகள் கற்பவர் மனத்தைக் கவர்கின்றன .

கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் . ( 57 )

பாடலின் பொருள்.

ஆடும் இளம் பெண்கள் , கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள் . வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான் ‘ . இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார் .

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் . ( 58 )

பாடலின் பொருள்.

‘ மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன . வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர் . அத்தை மகனும் , மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன் , முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் , என்னைத் திருமணம் செய்துகொள்கிறான் ‘ . இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார் .

சொல்லும் பொருளும் :

தீபம் – விளக்கு ;

சதிர் – நடனம் ;

தாமம் – மாலை

தெரிந்து தெளிவோம்

பெண்ணின் திருமண வயது 18 ; ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இலக்கணக் குறிப்பு

முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

தொட்டு – தொடு ( தொட்டு ) + உ

தொடு – பகுதி , தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம்

உ – வினையெச்ச விகுதி

கண்டேன் – காண் ( கண் ) + ட் + ஏன்

காண் – பகுதி ( ‘ கண் ‘ எனக் குறுகியது விகாரம் ) ,

ட் – இறந்தகால இடைநிலை

ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் . அவருள் ஆண்டாள் மட்டு பெண் . இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால் , ” சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அழைக்கப்பெற்றார் . இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர் . ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ” நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ” ஆகும் . இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை , நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன . நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது . நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன .

சீவக சிந்தாமணி

 -திருத்தக்கத் தேவர்

சங்க இலக்கியங்கள் நிகழ்வுகளில் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தன . அவற்றைத் தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அறக்கருத்துகளைக் கூறுவனவாக இருந்தன . பின்னர் , ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவனவாய்க் காப்பியங்கள் உருவாயின . இவ்வகையில் , சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம் சீவக சிந்தாமணி . இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்பதே இக்காப்பியத்தின் மையக்கருத்தாகும் . ஏமாங்கத நாட்டின் வளத்தைத் திருத்தக்கத்தேவர் வருணிக்கும் பகுதி அந்நாட்டின் செழிப்பை உணர்த்துகிறது .

ஏமாங்கத நாட்டு வளம்

பார் போற்றும் ஏமாங்கதம்

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும் .

ஏமாங்கதம் என்று இசையால்திசை போயது உண்டே ! ( 31 )

பாடலின் பொருள்

தென்னை மரத்திலிருந்து நன்றாக முற்றிய காய் விழுகிறது . அது விழுகின்ற வேகத்தில் , பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள சுவைமிக்க தேனடையைக் கிழித்து , பலாப் பழத்தினைப் பிளந்து , மாங்கனியைச்சிதற வைத்து , வாழைப் பழத்தினை உதிர்க்கவும் செய்தது . இத்தகு வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பலதிசைகளிலும் பரவியிருந்தது .

சொல்லும் பொருளும் :

தெங்கு – தேங்காய் ;

இசை – புகழ் ;

வருக்கை – பலாப்பழம் ;

நெற்றி – உச்சி

வாரி வழங்கும் வள்ளல்

வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்

கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை

 உள்ளம் இல்லவர்க்கு ஊர்தொறும் உய்த்துஉராய்

வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே . ( 36 )

பாடலின் பொருள்

இரந்து கேட்பவர்க்கு இல்லை யென்னாது வாரி வழங்கும் செல்வர்களைப் போன்றது வெள்ளம் . அது உயர்ந்த மலையிலிருந்து செல்வக் குவியலைச் சேர்த்துக்கொண்டு வந்து , ஊக்கமில்லாத மக்களுக்கு ஊர்தோறும் வழங்கும் வகையில் நாட்டினுள் விரைந்து பாய்கிறது .

சொல்லும் பொருளும் :

மால்வரை – பெரியமலை ;

மடுத்து – பாய்ந்து ;

கொழுநிதி – திரண்ட நிதி

மணம் கமழும் கழனி

நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்

செறிமருப்பு ஏற்றினம் சிலம்பப் பண் உறீஇப்

பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே . ( 44 )

பாடலின் பொருள்

அழகான கொம்புகளை உடைய ஆண் எருமைகளும் நேரான கொம்புகளையுடைய வலிமையான எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன . அவ்வொலி கேட்டுப் புள்ளிகளும் வரிகளும் உடைய வரால் மீன்கள் கலைந்து ஓடுகின்றன . அத்தகு மணம் வீசும் வயலில் உழவர் கூட்டம் வெள்ளம் போல் நிறைந்திருந்தது .

சொல்லும் பொருளும் ;

மருப்பு – கொம்பு ;

வெறி – மணம் ;

கழனி – வயல் ;

செறி – சிறந்த ;

இரிய – ஓட

தலைவணங்கி விளைந்த நெற்பயிர்

சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே ” . ( 53 )

பாடலின் பொருள்

கருக்கொண்ட பச்சைப் பாம்புபோல நெற்பயிர்கள் தோ கொண்டுள்ளன . நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது , செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலைநிமிர்ந்து நிற்பதுபோல் உள்ளது . அப்பயிர்கள் முற்றியவுடன் நெற்கதிர்கள் சாய்ந்திருப்பது , தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களின் பணிவைப்போல் உள்ளது .

சொல்லும் பொருளும்

சூல் – கரு

எல்லாம் ஆயிரம் ஆயிரமாய்

அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்

கொடியனார் செய் கோலமும் வைகல்தோறும் ஆயிரம்

மடிவுஇல் கம்மியர்களோடும் மங்கலமும் ஆயிரம்

ஒடிவுஇலை வேறுஆயிரம் ஓம்புவாரின் ஓம்பலே . ( 76 )

பாடலின் பொருள்

வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில் நாள்தோறும் கிடைக்கும் உணவு வகைகள் ஆயிரம் : அறச்சாலைகள் ஆயிரம் : அங்கே மகளிர் ஒப்பனை செய்துகொள்ள மணிமாடங்கள் ஆயிரம் : மேலும் செய்தொழிலில் சிறிதும் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரம் ; அதனால் நிகழும் திருமணங்களும் ஆயிரம் : ஏமாங்கத நாட்டில் தவிர்தலின்றி காவல் செய்யும் பாதுகாவலரும் ஆயிரம் .

சொல்லும் பொருளும்

அடிசில் – சோறு :

மடிவு – சோம்பல்

கொடியனார் – மகளிர்

நாடுகள் சூழ்ந்த ஏமாங்கதம்

நற்றவம் செய்வார்க்கு இடம்தவம் செய்வார்க்கும் அஃது இடம்

நற்பொருள் ர்க்கு இடம்பொருள் செய்வார்க்கும் அஃதுஇடம்

வெற்ற ( ம் ) இன்பம் விழைவிப்பான் விண்உவந்து வீழ்ந்தென

மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ . ( 77 )

பாடலின் பொருள்

ஏமாங்கத நாடு , உண்மையான தவம் புரிவோர்க்கும் இல்லறம் நடத்துவோர்க்கும் இனிய இடமாகும் . நிலையான பொருளைத் தேடுவோர்க்கும் நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடுவோர்க்கும் உகந்த இடமாகும் . நாடுகள் சூழ்ந்து இருக்கும் எழில்மிகு சிறப்புப் பொருந்திய ஏமாங்கத நாடு வானுலகம் வழங்கும் இன்பம் , உலகோர் ஏற்கும் வகையில் தாழ்ந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தது போல் திகழ்ந்தது

சொல்லும் பொருளும்

நற்றவம் – பெருந்தவம் ;

வட்டம் – எல்லை ;

வெற்றம் – வெற்றி

 சீவகசிந்தாமணி – இலம்பகங்கள்

1. நாமகள் இலம்பகம்

2.கோவிந்தையார் இலம்பகம்

3. காந்தருவதத்தையார் இலம்பகம்

4. குணமாலையார் இலம்பகம்

5. பதுமையார் இலம்பகம்

6. கேமசரியார் இலம்பகம்

7. கனகமாலையார் இலம்பகம்

8. விமலையார் இலம்பகம்

9. சுரமஞ்சியார் இலம்பகம்

10. மண்மகள் இலம்பகம்

11.பூமகள் இலம்பகம்

12. இலக்கணையார் இலம்பகம்

13. முத்தி இலம்பகம்.

இலக்கணக் குறிப்பு

 நற்றவம் – பண்புத்தொகைகள் ;

செய்கோலம் – வினைத்தொகை ;

தேமாங்கனி ( தேன்போன்ற மாங்கனி ) – உவமைத்தொகை

இறைஞ்சி – வினையெச்சம் .

கொடியனார் – இடைக்குறை

பகுபத உறுப்பிலக்கணம்

இறைஞ்சி –இறைஞ்சு + இ

இறைஞ்சு – பகுதி ;

இ – வினையெச்ச விகுதி

ஓம்புவார் – ஓம்பு + வ் + ஆர்

ஓம்பு – பகுதி ;

வ் – எதிர்கால இடைநிலை ;

ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று . இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும் . ‘ இலம்பகம் ‘ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது . 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல் , ‘ மணநூல் ‘ எனவும் அழைக்கப்படுகிறது . நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது . இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர் . சமண சமயத்தைச் சார்ந்த இவர் , இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்றமுடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார் . இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு . சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘ நரிவிருத்தம் ‘ என்னும் நூலை இயற்றினார் என்பர் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: