துன்பம் வெல்லும் கல்வி, ஆசாரக்கோவை

துன்பம் வெல்லும் கல்வி

” கல்வி அழகே அழகு “ என்பர் பெரியோர் . கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி . கல்வி , அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும் . எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும் . பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும் . எனவே , படிப்போம் ! பண்பாட்டோடு நிற்போம் ! பார் போற்ற வாழ்வோம் !

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ

ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே- நம்

நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்

மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ

சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு

வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்

வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சொல்லும் பொருளும்

தூற்றும்படி – இகழும்படி

மூத்தோர் – பெரியோர்

மேதைகள் – அறிஞர்கள்

மாற்றார் – மற்றவர்

நெறி – வழி

வற்றாமல் – குறையாமல்

பாடலின் பொருள்

நாம் நூல்களைக் கற்ற தோடு இருந்துவிடக்கூடாது . கற்றதன் பயனை மறக்கக் கூடாது . நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது . நல்லவர்கள் குறைசொல்லும்படி வளரக் கூடாது .

பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது . பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது . பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது .

தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது . துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும் . சோம்பலைப் போக்கிட வேண்டும் . பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும் . வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் .

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும் . அதன்மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறவேண்டும் . பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும் .

நூல் வெளி

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் . மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

மாணவர் பிறர் _____ நடக்கக் கூடாது .

அ ) போற்றும்படி ஆ ) தூற்றும்படி இ ) பார்க்கும்படி ஈ ) வியக்கும்படி

நாம்  _____ சொல்படி நடக்க வேண்டும் .

அ ) இளையோர் ஆ ) ஊரார் இ ) மூத்தோர் ஈ ) வழிப்போக்கர்

கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கையில் + பொருள் ஆ ) கைப் + பொருள் இ ) கை + பொருள் ஈ ) கைப்பு + பொருள்

மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) மானம்இல்லா ஆ ) மானமில்லா இ ) மானமல்லா ஈ ) மானம்மில்லா

ஆசாரக்கோவை

நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும் . நாம் ஒழுக்க நெறிகளை அறிந்தால்தான் அவற்றைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ முடியும் . இந்த நோக்கத்திற்காகவே நம் முன்னோர் அற நூல்களைப் படைத்தனர் . நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறநூல்கள் விளக்குகின்றன . அவற்றை அறிவோம் வாருங்கள் .

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

– பெருவாயின் முள்ளியார்

சொல்லும் பொருளும்

நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை

ஒப்புரவு – எல்லோரையும் சமமாகப் பேணுதல்

நட்டல் – நட்புக் கொள்ளுதல்

பாடலின் பொருள்

பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல் ; பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் ; இனிய சொற்களைப் பேசுதல் : எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் ; கல்வி அறிவு பெறுதல் : எல்லோரையும் சமமாகப் பேணுதல் ; அறிவுடையவராய் இருத்தல் ; நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும் .

நூல் வெளி

ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் . இவர் பிறந்த ஊர் கயத்தூர் . ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள் . இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

பிறரிடம் நான் _____ பேசுவேன் .

அ ) கடுஞ்சொல் ஆ ) இன்சொல் இ ) வன்சொல் ஈ ) கொடுஞ்சொல்  

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ____ஆகும் .

அ ) வம்பு ஆ ) அமைதி இ ) அடக்கம் ஈ ) பொறை

அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) அறிவுடைமை ஆ ) அறிவுஉடைமை இ ) அறியுடைமை ஈ ) அறிஉடைமை

இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ____

அ ) இவைஎட்டும் ஆ ) இவையெட்டும் இ ) இவ்வெட்டும் ஈ ) இவ்எட்டும்

நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___

அ ) நன்றி + யறிதல் ஆ ) நன்றி + அறிதல் இ ) நன்று + அறிதல் ஈ ) நன்று + யறிதல்

பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) பொறுமை + உடைமை ஆ ) பொறை + யுடைமை இ ) பொறு + யுடைமை ஈ ) பொறை + உடைமை

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: