தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்மொழி மரபு

தமிழ்மொழி வாழ்த்து

மொழி , கருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்று . அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது : உணர்வுடன் கலந்தது . தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர் . புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் . அத்தகைய பாடல் ஒன்றை அறிவோம் .

 வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே !

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே !

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே !

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே !

” சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே !

தொல்லை வினைதரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ்நாடே !

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே !

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே !

-பாரதியார்

சொல்லும் பொருளும்

நிரந்தரம் – காலம் முழுமையும்

வைப்பு – நிலப்பகுதி

சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்

வண்மொழி – வளமிக்கமொழி

இசை – புகழ்

தொல்லை –பழமை , துன்பம்

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க ! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க ! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து , புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க ! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க ! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும் ! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக ! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க ! தமிழ்மொழி வாழ்க ! தமிழ்மொழி வாழ்க ! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க ! வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க !

நூல் வெளி

கவிஞர் , எழுத்தாளர் , இதழாளர் , சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர் , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி . சுப்பிரமணிய பாரதியார் . இந்தியா , விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் . கவிதைகள் மட்டுமன்றி , சந்திரிகையின் கதை , தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர் . சிந்துக்குத் தந்தை , செந்தமிழ்த் தேனீ , புதிய அறம் பாட வந்த அறிஞன் , மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார் . இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது .

செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் .

நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை

மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே

எழில்மகவே எந்தம் உயிர் .

உயிரும்நீ மெய்யும்நீ ஓங்கும் அறமாம்

பயிரும்நீ இன்பம்நீ அன்புத் தருவும்நீ

வீரம்நீ காதல்நீ ஈசன் அடிக்குநல்

ஆரம்நீ யாவும்நீ யே !

– து . அரங்கன்சரியான

விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்

அ ) வைப்பு ஆ ) கடல் இ ) பரவை ஈ ) ஆழி

‘ என்றென்றும் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

 அ ) என் + றென்றும் ஆ ) என்று + என்றும் இ ) என்றும் + என்றும் ஈ ) என் + என்றும்

‘ வானமளந்தது ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வான + மளந்தது ஆ ) வான் + அளந்தது இ ) வானம் + அளந்தது ஈ ) வான் + மளந்தது

அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) அறிந்ததுஅனைத்தும் ஆ ) அறிந்தனைத்தும் இ ) அறிந்ததனைத்தும் ஈ ) அறிந்துனைத்தும்

வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) வானம்அறிந்து ஆ ) வான்அறிந்த இ ) வானமறிந்த ஈ ) வான்மறிந்த

தமிழ்மொழி மரபு

வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன . வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும் . மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும் . தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன . அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன . செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகளை அறிவோம் வாருங்கள் !

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும் .

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை

மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன

மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்

-தொல்காப்பியர்

சொல்லும் பொருளும்

விசும்பு – வானம்

மயக்கம் – கலவை

இருதிணை – உயர்திணை , அஃறிணை

வழாஅமை – தவறாமை

ஐம்பால் – ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால்

மரபு – வழக்கம்

திரிதல் – மாறுபடுதல்

செய்யுள் – பாட்டு

தழாஅல்- தழுவுதல் ( பயன்படுத்துதல் )

பாடலின் பொருள்

இவ்வுலகம் நிலம் , நீர் , தீ , காற்று , வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும் . இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும் . உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு .

திணை , பால் வேறுபாடு அறிந்து , இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும் . இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும் .

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும் .

அளபெடை

புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு . இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை . தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும் . அதற்கு அடையாளமாகவே ‘ ழா’வை அடுத்து ‘ அ ‘ இடம் பெற்றுள்ளது . இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர் . இதனைப் பற்றி உயர் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம் .

நூல் வெளி

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் . தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும் . இந்நூல் எழுத்து , சொல் , பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது . பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் ( 91,92,93 ) இங்குத் தரப்பட்டுள்ளன .

தெரிந்து தெளிவோம்

இளமைப் பெயர்கள்

புலி – பறழ்

சிங்கம் – குருளை

யானை – கன்று

பசு – கன்று

கரடி – குட்டி

ஒலி மரபு

புலி – உறுமும்

சிங்கம் – முழங்கும்

யானை – பிளிறும்

பசு – கதறும்

கரடி – கத்தும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

பறவைகள் பறந்து செல்கின்றன .

அ ) நிலத்தில் ஆ ) விசும்பில் இ ) மரத்தில்

இயற்கையைப் போற்றுதல் தமிழர்

அ ) மரபு ஆ ) பொழுது வரவு

‘ இருதிணை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) இரண்டு + திணை ஆ ) இரு + திணை இ ) இருவர் + திணை ஈ ) இருந்து + திணை

 ‘ ஐம்பால் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) ஐம் + பால் ஆ ) ஐந்து + பால் இ ) ஐம்பது + பால் ஈ ) ஐ + பால் ஈ ) நீரில் ஈ ) தகவு

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: