தமிழோவியம்,தமிழ்விடு தூது

தமிழோவியம்

-ஈரோடு தமிழன்பன்

என்றென்றும் நிலைபெற்ற தமிழே ! தோற்றத்தில் தொன்மையும் நீதான் ! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான் ! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான் ! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான் ! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய் ! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம் !

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே ! எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே !

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் – உன்

நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள் !

– காலம் பிறக்கும் முன் …

ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் – நீதி

ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்

மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்

மட்டுமே போதுமே ஓதி , நட …

– காலம் பிறக்கும் முன் ….

எத்தனை எத்தனை சமயங்கள் – தமிழ்

ஏந்தி வளர்த்தது தாயெனவே

சித்தர் மரபிலே தீதறுக்கும் – புதுச்

சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே ….

– காலம் பிறக்கும் முன் …

விரலை மடக்கியவன் இசையில்லை – எழில்

வீணையில் என்று சொல்வதுபோல்

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்

கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் !

– காலம் பிறக்கும் முன் ….

இலக்கணக்குறிப்பு

எத்தனை எத்தனை , விட்டு விட்டு – அடுக்குத் தொடர்கள்

ஏந்தி – வினையெச்சம்

காலமும் – முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய்

வளர் – பகுதி

ப் – சந்தி ,

ப் – எதிர்கால இடைநிலை

ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘ தமிழோவியம் ‘ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது . இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் ” ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை . பாடலும் அப்படித்தான் ! ” என்று குறிப்பிட்டுள்ளார் .

ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை , சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார் . ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார் . இவரது ‘ வணக்கம் வள்ளுவ ‘ என்னும் கவிதை நூலுக்கு 2004 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது . ‘ தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல் . இவரது கவிதைகள் இந்தி , உருது , மலையாளம் , ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .

 ** தெரிந்து தெளிவோம் தெரியுமா ?

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்

-பிங்கல நிகண்டு

உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்

-பாரதியார்

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் இலங்கை , சிங்கப்பூர்

தமிழ்விடு தூது

தமிழின் பெருமையைப் பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல . கவிதை , அதற்கொரு கருவி . கிளி , அன்னம் , விறலி , பணம் , தந்தி என்று பல தூது வாயில்களைப்பற்றி அறிந்துள்ளோம் . தமிழையே தூதுப் பொருளாக்கியுள்ளது ‘ தமிழ்விடு தூது ‘ . தமிழின் இனிமை , இலக்கிய வளம் , பாச்சிறப்பு , சுவை , அழகு , திறம் , தகுதி ஆகியன இச்சிற்றிலக்கியத்தில் விரவியுள்ளன .

சீர்பெற்ற செல்வம்

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே  – அந்தரமேல்

முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ

குற்றம் இலாப் பத்துக் குணம்பெற்றாய் – மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ

நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் – நாக்குலவும்

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு

ஆன நவரசம்உண் டாயினாய் – ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ

ஒழியா வனப்புஎட்டு உடையாய் ….

( கண்ணிகள் 69 – 76 )

சொல்லும் பொருளும்

குறம் , பள்ளு – சிற்றிலக்கிய வகைகள் ;

மூன்றினம் – துறை ,

தாழிசை , விருத்தம் : திறமெல்லாம் – சிறப்பெல்லாம் ;

சிந்தாமணி – சிதறாத மணி ( சீவகசிந்தாமணி ) , என்னும் இருபொருளையும் குறிக்கும் :

சிந்து – ஒருவகை இசைப்பாடல் .

முக்குணம் – மூன்று குணங்கள் ( சத்துவம் – அமைதி , மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம் ; இராசசம் – போர் , தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம் : தாமசம் – சோம்பல் , தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம் ) ; பத்துக்குணம் – செறிவு , சமநிலை முதலிய பத்துக்குண அணிகள் .

வண்ணங்கள் ஐந்து – வெள்ளை , சிவப்பு , கறுப்பு , மஞ்சள் , பச்சை : வண்ணம்நூறு – குறில் , அகவல் , தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு .

ஊனரசம் – குறையுடைய சுவை ; நவரசம் – வீரம் , அச்சம் , இழிப்பு , வியப்பு , காமம் , அவலம் , கோபம் , நகை , சமநிலை ஆகிய ஒன்பது சுவை ; வனப்பு –அழகு . அவை அம்மை , அழகு , தொன்மை , தோல் , விருந்து , இயைபு , புலன் , இழைபு .

பாடலின் பொருள்

இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே ! இயல் , இசை , நாடகம் என , மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே ! அறிவால் உண்ணப்படும் தேனே ! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது . அதைக் கேட்பாயாக .

தமிழே ! உன்னிடமிருந்து குறவஞ்சி , பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர் . பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய் . அதனால் உனக்குத் தாழிசை , துறை , விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ ?

பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று ( பொருந்தி நின்று ) என்றுமே ‘ சிந்தா ( கெடாத ) மணியாய் இருக்கும் உன்னை ( இசைப்பாடல்களுள் ஒருவகையான ) ‘ சிந்து ‘ என்று ( அழைப்பது நின் பெருமைக்குத் தகுமோ ? அவ்வாறு ) கூறிய நா இற்று விழும் அன்றோ ?

வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள்கூட சத்துவம் , இராசசம் , தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள் . ஆனால் , நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு , தெளிவு , சமநிலை , இன்பம் , ஒழுகிசை , உதாரம் , உய்த்தலில் பொருண்மை , காந்தம் , வலி , சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய் .

மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை , செம்மை , கருமை , பொன்மை , பசுமை என ஐந்திற்குமேல் இல்லை . நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில் , அகவல் , தூங்கிசை வண்ணம் முதலாக இடைமெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய் .

நாவின்மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை . நீயோ செவிகளுக்கு விருந்தளிக் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய் . தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய் .

தெரிந்து தெளிவோம்

கண்ணி – இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர் . அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும் .

இலக்கணக் குறிப்பு

முத்திக்கனி – உருவகம்

தெள்ளமுது – பண்புத்தொகை

குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நா – ஓரெழுத்து ஒருமொழி

செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத்தொகை .

சிந்தா மணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

கொள்வார் – கொள் + வ் + ஆர்

கொள் – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை

ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

உணர்ந்த – உணர் + த் ( ந் ) + த் + அ

உணர் – பகுதி

த் –சந்தி ,

த் – ந் – ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அ- பெயரெச்ச விகுதி

நூல் வெளி

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘ தூது ‘ என்பதும் ஒன்று . இது , ‘ வாயில் இலக்கியம் ‘ , ‘ ‘ சந்து இலக்கியம் ‘ என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது . இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக ‘ மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் ‘ கலிவெண்பா வால் இயற்றப்படுவதாகும் , தமிழ்விடு தூது , மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி , தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது . இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது . தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன . இந்நூலை 1930 இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார் . இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .

நமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது

– தமிழ்மொழி

” காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்

மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க ”

– கவியோகி சுத்தானந்த பாரதியார் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: