ஞானம் – காலக்கணிதம் – சித்தாளு

ஞானம்

– தி.சொ.வேணுகோபாலன்

இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை . இயங்குதலின்றி உலகில்லை . உயர்வில்லை . கடல் அலைகளைப்போல் பணிகளும் ஓய்வதில்லை . அலைகள் ஓய்ந்திடின் கடலுமில்லை . பணிகள் ஓய்ந்திடின் உலகமுமில்லை . தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளர வேண்டும் .

சாளரத்தின் கதவுகள் , சட்டம் ;

காற்றுடைக்கும் .

தெருப்புழுதி வந்தொட்டும் .

கரையான் மண் வீடு கட்டும் .

அன்று துடைத்தேன் ,

சாயம் அடித்தேன் ,

புதுக்கொக்கி பொருத்தினேன் .

காலக்கழுதை

கட்டெறும்பான

இன்றும்

கையிலே

வாளித்தண்ணீர் , சாயக்குவளை ,

கந்தைத்துணி , கட்டைத் தூரிகை :

அறப்பணி ஓய்வதில்லை

ஓய்ந்திடில் உலகமில்லை !

 கோடை வயல் – தொகுப்பு

நூல் வெளி

நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் ‘ கோடை வயல் ‘ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது . இவர் திருவையாற்றில் பிறந்தவர் ; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர் ; ‘ எழுத்து ‘ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர் . இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம் .

காலக்கணிதம்

– கண்ணதாசன்

கவிஞன் என்பவன் யார் ? அவன் குணம் என்ன ? அவன் பணி என்ன ? மனம் என்னும் வயவில் , சொல்லேர் உழவனாக . சிந்தனை விதையைத் தூவி , மடமைக் களை பறித்து , தத்துவ நீர் பாய்ச்சி , அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன் . காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான் .

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் !

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம் !

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை !

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை ; அறிக !

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன் ;

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன் !

பாசம் மிகுத்தேன் ; பற்றுதல் மிகுத்தேன் !

ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன் !

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன் ;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன் !

பண்டோர் கம்பன் , பாரதி , தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன் !

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது !

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்

இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு !

கல்லாய் மரமாய்க் காடுமே டாக

மாறா திருக்கயான் வனவிலங் கல்லன் !

மாற்றம் எனது மானிடத் தத்துவம் ;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன் !

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை !

தலைவர் மாறுவர் ; தர்பார் மாறும் ;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் !

கொள்வோர் கொள்க ; குரைப்போர் குரைக்க !

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது ;

நானே தொடக்கம் ; நானே முடிவு ;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் !

நூல் வெளி

‘ காலக்கணிதம் ‘ என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது . ‘ முத்தையா ‘ என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் . இவரது பெற்றோர் சாத்தப்பன் -விசாலாட்சி ஆவர் . 1949 ஆம் ஆண்டு ” கலங்காதிரு மனமே “ என்ற பாடலை எழுதி , திரைப்படப் பாடலாசிரியரானார் . திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன் . இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் . தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் . சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் . இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார் .

கவிச்சக்கரவர்த்தியும் கவியரசும்

நதியின் பிழையன்று

நறும்புனலின்மை அன்றே

பதியின் பிழையன்று

பயந்த நம்மைப் புரந்தான்

மதியின் பிழையன்று

மகன் பிழையன்று மைந்த

விதியின் பிழை நீ

இதற்கென்னை வெகுண்டதென்றன்

– கம்பன்

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

நதிசெய்த குற்றம் இல்லை

விதிசெய்த குற்றம் இன்றி

வேறு யாரம்மா !

-கண்ணதாசன்

சித்தாளு

– நாகூர்ரூமி

வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம் . அதிசயம் என்றும் போற்றுகிறோம் . அதை உருவாக்க உழைத்தவர் , வியர்த்தவர் , இடுப்பொடியப் பாடுபட்டவர்களை நினைத்ததுண்டா ? அந்த ஏழைகளின் துயரை , ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா ? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள் .

பொற்காலமாக இருந்தாலும்

இவள் தலையில் எழுதியதோ

கற்காலம்தான் எப்போதும் .

தொலைந்ததே வாழ்வு என

தலையில் கைவைத்து

புலம்புவார் பூமியிலே

தன் வாழ்வு தொலைக்காமல்

தற்காத்து வைப்பதற்காய்

தலையில் கைவைக்கிறாள் இவள் .

வாழ்வில் தலைக்கனம்

பிடித்தவர் உண்டு .

தலைக்கனமே வாழ்வாக

ஆகிப்போனது இவளுக்கு .

அடுக்குமாடி அலுவலகம்

எதுவாயினும்

அடுத்தவர் கனவுக்காக

அலுக்காமல் இவள் சுமக்கும்

கற்களெல்லாம்

அடுத்தவேளை உணவுக்காக .

செத்தாலும் சிறிதளவே

சலனங்கள் ஏற்படுத்தும்

சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது

நூல் வெளி

முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் ; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர் . கவிதை , குறுநாவல் , சிறுகதை , மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர் . மீட்சி , சுபமங்களா , புதிய பார்வை , குங்குமம் , கொல்லிப்பாவை , இலக்கிய வெளிவட்டம் , குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன . இதுவரை நதியின் கால்கள் , ஏழாவது சுவை , சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன . மொழிபெயர்ப்புக் கவிதைகள் , சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘ கப்பலுக்குப் ‘ போன மச்சான் ‘ என்னும் நாவலையும் படைத்துள்ளார் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: