குடும்ப விளக்கு, சிறுபஞ்சமூலம்

குடும்ப விளக்கு

-பாரதிதாசன்

புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள் . இயற்கையைப் போற்றுதல் , தமிழுணர்ச்சி ஊட்டுதல் , பகுத்தறிவு பரப்புதல் , பொதுவுடைமை பேசுதல் , விடுதலைக்குத் தூண்டுதல் , பெண்கல்வி பெறுதல் போன்ற பாடுபொருள்களில் தோன்றிய பல்வேறு இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று . பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு .

கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம் அந்நி லத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி அங்கே

நல்லறிவு உடைய மக்கள்

விளைவது நவில் வோநான் !

பாடலின் பொருள்

கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள் . அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம் . நல்ல பயிர் விளையாது . அதுபோல கல்வி அறிவிலாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள் . கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள் . அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ ? செலுத்துதல்

சொல்லும் பொருளும் ;

களர்நிலம் – பண்படாத நிலம் ,

நவிலல் – சொல்லல் .

வானூர்தி செலுத்தல் வைய

மாக்கடல் முழுது மளத்தல்

ஆனஎச் செயலும் ஆண்பெண்

அனைவர்க்கும் பொதுவே ! இன்று

நானிலம் ஆட வர்கள்

ஆணையால் நலிவு அடைந்து

போனதால் பெண்களுக்கு

விடுதலை போனது அன்றோ !

பாடலின் பொருள்

வானூர்தியைச் உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண் , பெண் இருபாலருக்கும் பொதுவானவை . இன்று உலகமானது ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால்தான் பெண்களுக்கு விடுதலை பறிபோனது .

சொல்லும் பொருளும் ;

வையம் – உலகம் :

மாக்கடல் – பெரிய கடல் ,

இந்நாளில் பெண்கட்கு எல்லாம்

ஏற்பட்ட பணியை நன்கு

பொன்னேபோல் ஒருகை யாலும்

விடுதலை பூணும் செய்கை

இன்னொரு மலர்க்கை யாலும்

இயற்றுக ! கல்வி இல்லா

மின்னாளை வாழ்வில் என்றும்

மின்னாள் என்றே உரைப்பேன் !

பாடலின் பொருள்

இன்று பெண்களுக்கென உள்ள வேலைகளையும் அவர்களின் விடுதலைக்கான செயலையும் பெண்களே செய்தல் வேண்டும் . மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள் பெண் ; ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள் என்றே நான் சொல்வேன்

சொல்லும் பொருளும் :

இயற்றுக – செய்க ;

மின்னாளை –  மின்னலைப் போன்றவளை ;

மின்னாள் – ஒளிரமாட்டாள்

சமைப்பதும் வீட்டு வேலை

சலிப்பின்றிச் செயலும் பெண்கள்

தமக்கே ஆம் என்று கூறல்

சரியில்லை ; ஆடவர்கள்

நமக்கும் அப் பணிகள் ஏற்கும்

என்றெண்ணும் நன்னாள் காண்போம் !

சமைப்பது தாழ்வா ? இன்பம்

சமைக்கின்றார் சமையல் செய்வார் !

பாடலின் பொருள்

சமைப்பது , வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது . அவை நமக்கும் உரியவை என்று ஆண்கள் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் வரவேண்டும் . அந்த நன்னாளைக் காண்போம் . சமைப்பது தாழ்வென எண்ணலாமா ? சமைப்பவர் உணவை மட்டும் சமைப்பதில்லை . அதற்கும் மேலாக இன்பத்தையும் படைக்கின்றார் .

உணவினை ஆக்கல் மக்கட்கு !

உயிர்ஆக்கல் அன்றோ ? வாழ்வு

பணத்தினால் அன்று ! வில்வாள்

படையினால் காண்ப தன்று !

தணலினை அடுப்பில் இட்டுத்

தாழியில் சுவையை இட்டே

அணித்திருந் திட்டார் உள்ளத் ( து )

அன்பிட்ட உணவால் வாழ்வோம் !

பாடலின் பொருள்

உணவைச் சமைத்துத் தருவது என்பது உயிரை உருவாக்குவது போன்றதாகும் . ” வாழ்க்கை ” என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று . அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்கும் கலத்தில் சுவையை இட்டு , அருகில் இருந்து உள்ளத்து அன்போடு உணவு பரிமாறுதலில்தான் வாழ்வு நலம்பெறுகிறது

சொல்லும் பொருளும் :

தணல் – நெருப்பு ;

தாழி – சமைக்கும் கலன் ;

அணித்து – அருகில்

சமைப்பது பெண்க ளுக்குத்

தவிர்க்காணாக் கடமை என்றும் .

சமைத்திடும் தொழிலோ , நல்ல

தாய்மார்க்கே தக்கது என்றும்

தமிழ்த்திரு நாடு தன்னில்

இருக்குமோர் சட்டந் தன்னை

இமைப் போதில் நீக்கவேண்டில்

பெண்கல்வி வேண்டும் யாண்டும் !

பாடலின் பொருள்

சமைக்கும் பணி , பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும் அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது எனவும் தமிழ்த்திரு நாட்டில் இருக்கின்ற வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்

சொல்லும் பொருளும் :

தவிர்க்காணா – தவிர்க்க இயலாத ;

யாண்டும் – எப்பொழுதும் .

இலக்கணக்குறிப்பு

மாக்கடல் – உரிச்சொல்தொடர் ;

ஆக்கல் – தொழில்பெயர் ;

பொன்னேபோல் – உவம் உருபு ;

மலர்க்கை – உவமைத்தொகை ;

வில்வாள் – உம்மைத்தொகை ;

தவிர்க்காணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .

பகுபத உறுப்பிலக்கணம்

விளைவது = விளை + வ் + அ + து

விளை – பகுதி ;

வ் – எதிர்கால இடைநிலை ;

அ – சாரியை ;

து – தொழிற்பெயர் விகுதி .

சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்

சமை – பகுதி ;

க் – சந்தி ;

கின்று – நிகழ்கால இடைநிலை ;

ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி .

நூல் வெளி

குடும்ப விளக்கு , குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது ; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது ; குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும் . இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது . இரண்டாம் பகுதியில் , விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன .

பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம் . இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார் . பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இருண்ட வீடு , குடும்ப விளக்கு , தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள் . இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘ பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் ‘ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன . இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது .

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

– பாரதி

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ..

-கவிமணி

பெண்எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது

– பாவேந்தர்

சிறுபஞ்சமூலம்

-காரியாசான்

மனித வாழ்வைச் செழுமையாக்குபவை அறப் பண்புகளே . காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்கள் தோன்றிவருகின்றன . அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல் . வயதுக்கும் அறிவுக்கும் சில நேரங்களில் தொடர்பு இருப்பதில்லை . சாதனைக்கு வயது ஒரு தடையில்லை .

அறிவுடையார் தாமே உணர்வர்

பூவாது காய்க்கும் மரம் உள ; நன்று அறிவார் ,

மூவாது மூத்தவர் , நூல் வல்லார் ; தாவா ,

விதையாமை நாறுவ வித்துஉள ; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

( பா.எண் : 22 ).

பாடலின் பொருள்

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு . இதைப் போலவே நன்மை , தீமைகளை நன்குணர்ந்தவர் , வயதில் இளையவராக இருந்தாலும் , அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார் . பாத்தி அமைத்து விதை விதைக்காமலே , தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன . அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர் .

அணி : பாடலில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது .

சொல்லும் பொருளும்

 மூவாது – முதுமை அடையாமல் ;

நாறுவ – முளைப்ப ,

தாவா – கெடாதிருத்தல்

இலக்கணக் குறிப்பு

அறிவார் , வல்லார்- வினையாலணையும் பெயர்கள்

விதையாமை , உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்

தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

உரையாமை = உரை + ய் + ஆ + மை

உரை – பகுதி ;

ய் – சந்தி ( உடம்படுமெய் )

ஆ – எதிர்மறை இடைநிலை

மை – தொழிற்பெயர் விகுதி

காய்க்கும் = காய் + க் + க் + உம்

காய் – பகுதி ;

க் – சந்தி ;

க் – எதிர்கால இடைநிலை ;

உம் – பெயரெச்ச விகுதி

நூல் வெளி

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின . அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன . அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம் , ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள் . அவை கண்டங்கத்திரி , சிறுவழுதுணை , சிறுமல்லி , பெருமல்லி , நெருஞ்சி ஆகியன . இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது . அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன . இப்பாடல்கள் நன்மை தருவன , தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன .

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான் , மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் . காரி என்பது இயற்பெயர் . ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர் . மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது .

சாதனைக்கு வயது தடையன்று

10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார் .

11 ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘ பாரதி ‘ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார் .

15 ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ .

16 ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர் .

17 ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: