காற்றே வா – முல்லைப்பாட்டு

காற்றே வா !

– பாரதியார்

நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா ? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா ? காடு . மலை , அருவி , கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு . ‘ நீரின்றி அமையாது உலகு ‘ என்றாற் போல ‘ காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம் ‘ என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள் .

காற்றே , வா.

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு , மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா ;

இலைகளின்மீதும் , நீரலைகளின்மீதும் உராய்ந்து , மிகுந்த

ப்ராண ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு .

காற்றே , வா .

 எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு .

சக்தி குறைந்துபோய் , அதனை அவித்துவிடாதே .

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே .

மெதுவாக , நல்ல லயத்துடன் , நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு .

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் .

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் .

உன்னை வழிபடுகின்றோம் .

– பாரதியார் கவிதைகள்

சொல்லும் பொருளும் :

மயலுறுத்து – மயங்கச்செய்

ப்ராண ரஸம் – உயிர்வளி

லயத்துடன் – சீராக

நூல் வெளி

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் , ‘ நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா ‘ , ‘ சிந்துக்குத் தந்தை ‘ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் ; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் ; கவிஞர் ; கட்டுரையாளர் ; கேலிச்சித்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் ; சிறுகதை ஆசிரியர் ; இதழாளர் ; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் , பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் குயில்பாட்டு , பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு , புதிய ஆத்திசூடி என , குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர் ; இந்தியா , சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர் . பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார் ; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது ,

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது . ஆங்கிலத்தில் Prose Poetry ( Free verse ) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது . உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு , தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார் . இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று .

” திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்

சாயுது சாயுது சாயுது – பேய்கொண்டு

தக்கை யடிக்குது காற்று – தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட “

-பாரதியார்

ஒரு வரி கேள்விகள்

ஆசிரியர் – பாரதியார் 

இயற்பெயர் – சுப்பிரமணியன் 

புனைப் பெயர் – ஷெல்லி தாசன் 

பெற்றோர் – சீன்னச்சாமி ஐயர் – இலக்குமி அம்மாள் 

பிறந்த ஊர் – எட்டயபுரம் துத்துக்குடி மாவட்டம் 

காலம் – 11.12.1882 -11.09.1921 

சிறப்புப் பெயர்கள் – விடுதலைக்கவிஞர் , தேசியக்கவி , அமரக்கவி , பாட்டுக்கொரு புலவன் , உலககவி , தமிழ் புதுக்கவிதையின் தந்தை , முன்னறி புலவன், தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி , மகாகவி 

எழுதிய நூல்கள் – கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாப்பா பாட்டு , பாஞ்சாலி சபதம் , புதிய ஆத்திச்சூர விநாயகர் நான்மணிமாலை , காட்சி 

உரைநடை நூல்கள் – ஞானாதம் , தராசு , சந்திரிகையின் கதை 

நாடகம் – ஜெசச்சித்திரம்  

இதம் – இந்தியா , சுதேச மித்திரன் , விஜயா , கர்மயோகி , பாலபாரதம் சக்கரவர்த்தினி

சிறுகதைகள் – சின்ன சங்கரன் கதை , கதைக்கொத்து ,ஸ்வர்ண குமார் , திண்டிய சாஸ்தரி ,ஆறில் ஒரு பங்கு , பூலோக ரம்பை 

ஆங்கிலத்தில் Prose poetry ( Free verse ) என்றமைக்கபட்ட வடிவத்தை தமிழில் அறிமுகப் படுத்தியவர் பாதியார் 

சிந்துக்குத் தந்தை என்று பாரட்டப்பட்டவர் பாரதியார் 

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று பாரட்டப்பட்டவர் பாரதியார்

பொருள் கூறும் 

வாசனை -நறுமணம் 

சக்தி- ஆற்றல் 

அவித்து- அணைத்து 

மயலுறுத்த – மயங்கச் செய் 

மடித்து – அழித்து  

ப்ராண – ரஸ்ம் – உயிர்வளி

லயத்துடன் – சீராக

இலக்கணக் குறிப்பு  

 காற்றோ வா – விளித்தொடர் 

மிகுந்த – பெயரெச்சம் 

சுமந்து – வினையெச்சம் 

நல்லொளி , நெடுங்காலம் – பண்புத்தொகை 

எமது உயிர் – ஆறாம் வேற்றுமை 

பாடுகிறோம் , கூறுகிறோம் , வழிபடுகின்றோம் – தன்பை பன்மை வினைமுற்று 

பகுபத உறுப்பிலக்கணம் 

பாடுகிறோம் – பாடு + கிறு+ ஒம் 

பாடு – பகுதி 

கிறு – நிகழ்கால இடைநிலை 

ஒம் – தன்மை பன்மை வினைமுற்று விகுதி 

 உராய்ந்து – உராய்+ த்(ந்) + த் + உ 

உராய்- பகுதி 

த் – சந்தி 

த்(ந்) – ஆனது விகாரம்

த் – இறந்ததால இடைநிலை 

உ- வினையெச்ச விகுதி 

வழிபடுகின்றோம் – வழிபடு + கின்று + ஒம் 

வழிபடு – பகுதி 

கின்று- நிதழ்கால இடைநிலை 

ஒம் – தன்மை பன்மை வினைமுற்று விகுதி

முல்லைப்பாட்டு

– நப்பூதனார்

இயற்கைச் சூழல் நமக்குள் இனிய உணர்வுகளைத் தூண்டுகிறது . தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர் . மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது . மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சங்க இலக்கியம் படம்பிடித்துக் காட்டுகிறது .

நல்லோர் விரிச்சி கேட்டல்

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல , நிமிர்ந்த மாஅல் போல ,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி , வலன் ஏர்பு ,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை ,

அருங்கடி மூதூர் மருங்கில் போகி ,

யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப , நெல்லொடு ,

நாழி கொண்ட , நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய் , கைதொழுது ,

பெருமுது பெண்டிர் , விரிச்சி நிற்ப

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி , ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள் , கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர் , தாயர் ” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்  

அடி : 1-17

சொல்லும் பொருளும்

நனந்தலை உலகம் – அகன்ற உலகம்

நேமி – சக்கரம்

கோடு – மலை

கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்

நறுவீ – நறுமணமுடைய மலர்கள்

தூஉய் – தூவி

விரிச்சி – நற்சொல்

சுவல் – தோள்

பாடலின் பொருள்

அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது . வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் , குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது , மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம் . அம்மேகம் , ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு , வலமாய் எழுந்து . மலையைச் சூழ்ந்து . விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில் , முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர் . யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள் ; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின்முன் தூவினர் . பிறகு தெய்வத்தைத் தொழுது . தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர் .

அங்கு , சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது . அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள் . குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள் . ” புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர் . வருந்தாதே என்றாள் . இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர் . இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர் .

நின் தலைவன் பகைவரை வென்று திறைப்பொருளோடு வருவது உறுதி . தலைவியே ! மனத்தடுமாற்றம் கொள்ளாதே ! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர் ,

 இலக்கணக்குறிப்பு

மூதூர் – பண்புத்தொகை

உறுதுயர் – வினைத்தொகை

கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை

தடக்கை – உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பொறித்த – பொறி + த் + த் + அ

பொறி – பகுதி

த் – சந்தி

த் – இறந்தகால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

விரிச்சி

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ ? முடியாதோ ? என ஐயம் கொண்ட பெண்கள் , மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய் , தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர் ; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர் .

நூல் வெளி

முல்லைப்பாட்டு , பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று . இது 103 அடிகளைக் கொண்டது . இப்பாடலின் 1-17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன . முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது ; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது ; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது . இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் .

ஒரு வரி கேள்விகள்

முல்லைப்பாட்டு எழுதியவர் நப்பூதனார்  

நம்பூதனாரின் தந்தை பொண் வணிகனார் 

பொன்வணிகனாரின் ஊர் காவிரிப்பூம்பட்டிணம் 

முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று 

முல்லைப்பாட்டு 103 பாடல் அடிவரையறை கொண்டது 

முல்லைப்பாட்டு ஆசிரியாப்பாவால் இயற்றப்பட்டது 

முல்லைப்பாட்டு முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது 

முல்லைப்பாட்டு பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்  

முல்லைப்பாட்டு பதினெண்மேல் கணக்கு நூல்களுன் ஒன்று 

முல்லைப்பாட்டு திணைக்குரிய பூவகை பிடவம் 

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர் திருமால் 

தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றவர்கள் முடிய பெண்டிர்  

பாடப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பாட்டின் அடிகள் 1-17 

குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துத் தந்தவன் மாவலிமன்னன் 

முல்லையின் நிலம் காடும் காடு சார்தே இடமும் 

கார்காலத்துக்குரிய மாதங்கள் ஆவணி , புரட்டாசி

இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

பொருள் கூறுக 

பெண்டிர் – மகளிர் 

கோவலர் – இடையர் 

விரிச்சி- நற்சொல் 

அரும்புகள் – மொட்டுகள் 

எழிலி -மேகம் 

சுவல் –தோள் 

கோடு -மலை 

தடக்கை -பெரிய கை 

நனந்தலை உலகம் – அகன்ற உலகம்  

வளைஇ -வளைந்து 

நேமி – சக்கரம் 

கொடுஞ் செலவு – விரைவாகச் செல்லுதல் 

நறுலி – நறுமண்குடைய மலர்கள்

இலக்கணக் குறிப்பு

சிறபுன் , அருங்கடி , ழுதுபெண்டிர் , நன்மொழி , கொடுங் கோல் , பெரும்பெயல் , மூதூர் – பண்புத் தொகைகள் 

அசைத்த , எழுந்த , தொடுத்து- பெயரெச்சங்கள்  

நல்லோர் – வினையாலணையும் பெயர் 

தடக்கை – உரிச்சொல் தொடர் 

உறுதுயா – வினைத்தொகை 

வளைஇ – செய்யுளிசையளபெடை 

கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை 

பகுபத உறுப்பில்க்கணம்

கொண்ட – கொள் ( ண் ) + ட் + அ 

கொள் – பகுதி 

ள்( ண் ) – ஆனது விகாரம் 

ட் – இறந்தகால இடைநிலை 

அ – பெயரெச்ச விகுதி 

பொறித்த – பொறி + த் + த் + அ

பொறி – பகுதி 

த் – சந்தி 

த் – இறந்தகால இடைநிலை 

அ – பெயரெச்ச விகுதி 

பொழிந்த – பொழி + த்(ந்) + த் + அ 

பொழி – பகுதி 

த் -சந்தி 

த(ந்) -ஆனது விகாரம் 

த் – இறந்தகால இடைநிலை 

அ – பெயரெச்ச விகுதி

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: