காடு

காடு

காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை . ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது . அதனால்தான் ‘ காட்டின் வளமே நாட்டின் வளம் ‘ என்று அறிஞர்கள் கூறுகின்றனர் . காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் கொண்டாட்டங்களையும் கவிதை வழி அறிவோம் .

கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீட் – கிளியே

பார்வை குளிருமடீ !

காடு பொருள்கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும்

கூடிக் களித்திடவே – கிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்

கொம்பில் கனிபறிக்கும்

மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே

வழியில் தடையிருக்கும் 

பச்சை மயில்நடிக்கும்

பன்றி கிழங்கெடுக்கும்

நச்சர வங்கலங்கும் – கிளியே

நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை

யானைகள் தின்றபடி

புதுநடை போடுமடீ – கிளியே

பூங்குயில் கூவுமடி !

சிங்கம் புலிகரடி

சிறுத்தை விலங்கினங்கள்

எங்கும் திரியுமடீ – கிளியே

இயற்கை விடுதியிலே !

– சுரதா

சொல்லும் பொருளும்

ஈன்று – தந்து

களித்திட – மகிழ்ந்திட

கொம்பு – கிளை

நச்சரவம் – விடமுள்ள பாம்பு

அதிமதுரம் – மிகுந்த சுவை

விடுதி – தங்கும் இடம்

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும் . அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும் . காடு பல வகையான பொருள்களைத் தரும் . காய்கனிகளையும் தரும் . எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும் . அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள , கனிகளைப் பறித்து உண்ணும் . மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும் . அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும் .

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும் . பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும் . அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும் , நரிக் கூட்டம் ஊளையிடும் . மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும் . பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும் . இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம் , புலி , கரடி , சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும் .

நூல் வெளி

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் . இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் . பாரதிதாசனின் இயற்பெயர் ‘ சுப்புரத்தினம் ‘ . எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார் . அதன் சுருக்கமே சுரதா என்பதாகும் . உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர் . அமுதும் தேனும் , தேன்மழை , துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார் .

இப்பாடல் தேன் மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது .

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது . கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘ கிளிக்கண்ணி ‘ ஆகும் .

தெரிந்து தெளிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கா , கால் , கான் , கானகம் , அடவி , அரண் , ஆரணி , புரவு , பொற்றை , பொழில் , தில்லம் , அழுவம் , இயவு , பழவம் , முளரி , வல்லை , விடர் , வியல் , வனம் , முதை , மிளை , இறும்பு , சுரம் , பொச்சை , பொதி , முளி , அரில் , அறல் , பதுக்கை , கணையம் .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

வாழை , கன்றை

அ ) ஈன்றது ஆ ) வழங்கியது இ ) கொடுத்தது ஈ ) தந்தது

‘ காடெல்லாம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) காடு + டெல்லாம் ஆ ) காடு + எல்லாம் இ ) கா + டெல்லாம்ஈ ) கான் + எல்லாம்

 ‘ கிழங்கு + எடுக்கும் ‘ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) கிழங்குஎடுக்கும் ஆ ) கிழங்கெடுக்கும் இ ) கிழங்குடுக்கும் ஈ ) கிழங்கொடுக்கும்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 

நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள் . அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை . மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன . கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம் . அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையா என்பதை விளக்கும் கவிதை ஒன்றை அறிவோம் .

ஊரின் வடகோடியில் அந்த மரம்

ஐந்து வயதில் பார்த்தபோதும்

இப்படியேதானிருந்தது

ஐம்பதைத் தாண்டி இன்றும்

அப்படியேதான்

தாத்தாவின் தாத்தா காலத்தில்

நட்டு வளர்த்த மரமாம்

அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்

பச்சைக்காய்கள் நிறம் மாறிச்

செங்காய்த் தோற்றம் கொண்டதுமே

சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்

பளபளக்கும் பச்சை இலைகளூடே

கருநீலக் கோலிக்குண்டுகளாய்

நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்

பார்க்கும்போதே நாவில் நீரூறும்

காக்கை குருவி மைனா கிளிகள்

இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்

அணில்களும் காற்றும் உதிர்த்திடும்

சுட்ட பழங்கள் பொறுக்க

சிறுவர் கூட்டம் அலைமோதும்

வயதுவந்த அக்காக்களுக்காய்

கையில் பெட்டியுடன் ஓடிஓடிப்

பழம் பொறுக்கும் தங்கச்சிகள்

இரவில் மெல்லிய நிலவொளியில்

படையெடுத்து வரும்

பழந்தின்னி வௌவால் கூட்டம்

தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும்

மரத்தின் குளிர்ந்த நிழலிலே

கிளியாந்தட்டின் சுவாரசியம்

புளியமிளாறுடன் அப்பா வரும்வரை

நேற்று மதியம் நண்பர்களுடன்

என் மகன் விளையாடியதும்

அந்த மரத்தின் நிழலில்தானே

பெருவாழ்வு வாழ்ந்த மரம்

நேற்றிரவுப் பேய்க்காற்றில்

வேரோடு சாய்ந்துவிட்டதாமே

விடிந்தும் விடியாததுமாய்

துஷ்டி கேட்கும் பதற்றத்தில்

விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்

குஞ்சு குளுவான்களோடு

எனக்குப் போக மனமில்லை

என்றும் என்மன வெளியில்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

குன்றுகளின் நடுவே மாமலைபோல

– ராஜமார்த்தாண்டன்

சொல்லும் பொருளும்

பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு

துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்  

நூல் வெளி

ராஜமார்த்தாண்டன் கவிஞர் , இதழாளர் , கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர் . கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் . ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர் . சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார் .

இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது .

புதுக்கவிதைகளைப் படித்துச் சுவைக்க .

கொப்புகள் விலக்கி

கொத்துக் கொத்தாய்

கருவேலங்காய்

பறித்துப் போடும் மேய்ப்பனை

ஒருநாளும்

சிராய்ப்பதில்லை

கருவமுட்கள் .

குழந்தை

வரைந்தது

பறவைகளை மட்டுமே

வானம் தானாக உருவானது .

– கலாப்ரியா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ___

அ ) பச்சை இலை ஆ ) கோலிக்குண்டு இ ) பச்சைக்காய் ஈ ) செங்காய் ‘

சுட்ட பழங்கள் ‘ என்று குறிப்பிடப்படுபவை

அ ) மண் ஒட்டிய பழங்கள்  ஆ ) சூடான பழங்கள் இ ) வேகவைத்த பழங்கள் ஈ ) சுடப்பட்ட பழங்கள்

 ‘ பெயரறியா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) பெயர் + றியா ஆ ) பெயர் + ரறியா இ ) பெயர் + அறியா ஈ ) பெயர் + அறியா  

‘ மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) மன + மில்லை ஆ ) மனமி + இல்லை இ ) மனம் + மில்லை ஈ ) மனம் + இல்லை

நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) நேற்றுஇரவு ஆ ) நேற்றிரவு ஈ ) நேற்இரவு இ ) நேற்றுரவு

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: