காசிக்காண்டம் – மலைபடுகடாம்

காசிக்காண்டம்

-அதிவீரராம பாண்டியர்

விருந்தோம்பல் முறைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லாச் சமூகங்களிலும் இப்பண்பாடு போற்றப்படுகிறது . விருந்தினரை உளமார வரவேற்று விருந்தளிக்கும் முறைபற்றி இலக்கியங்கள் பேசுகின்றன . விருந்தினர் மனம் மகிழக்கூடிய முறைகளில் விருந்தோம்ப வேண்டுமல்லவா ? அத்தகைய பாடல் ஒன்று விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டுகிறது .

பாடல்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

ஒழுக்கமும் வழிபடும் பண்பே

இல்லொழுக்கம் , ( பா எண் : 17 )

பாடலின் பொருள்

விருந்தினராக ஒருவர் வந்தால் . அவரை வியந்து உரைத்தல் , நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் , முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல் , ‘ வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல் , அவர் எதிரில் நிற்றல் . அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல் , அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல் , அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் , அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும் .

சொல்லும் பொருளும்

அருகுற – அருகில்

முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

உரைத்த – உரை + த் + த் + அ

உரை – பகுதி

த் – சந்தி

த் – இறந்த காலஇடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

வருக – வா ( வரு ) + க

வா – பகுதி

வரு எனத் திரிந்தது விகாரம்

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

ஒப்புடன் முகம் மலர்ந்தே

உபசரித்து உண்மை பேசி

உப்பிலாக் கூழ் இட்டாலும்

உண்பதே அமிர்தம் ஆகும்

முப்பழமொடு பால் அன்னம்

முகம் கடுத்து இடுவாராயின்

கப்பிய பசியி னோடு

கடும்பசி ஆகும் தானே “

-விவேகசிந்தாமணி . ( 4 )

இலக்கணக்குறிப்பு

நன்மொழி – பண்புத்தொகை

வியத்தல் , நோக்கல் , எழுதல் , உரைத்தல் , செப்பல் , இருத்தல் , வழங்கல் – தொழிற்பெயர்கள்

நூல் வெளி

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம் . இந்நூல் துறவு , இல்லறம் , பெண்களுக்குரிய பண்புகள் , வாழ்வியல் நெறிகள் , மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது . ‘ இல்லொழுக்கங் கூறிய ‘ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது .

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர் . தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம் . இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது . சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு . நைடதம் , லிங்கபுராணம் , வாயு சம்கிதை , திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள் .

மலைபடுகடாம்

– பெருங்கௌசிகனார்

பண்டைத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி , கலைகளிலும் சிறந்து விளங்கினர் . அன்று கூத்தர் , பாணர் , விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர் . அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர் . அவ்வகையாக விருந்தோம்பிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது தினைச்சோற்று விருந்து

அன்று அவண் அசைஇ , அல்சேர்ந்து அல்கி ,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி ,

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே ,

நும்இல் போல நில்லாது புக்கு ,

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

அடி : 158- 169

சொல்லும் பொருளும்

அசைஇ – இளைப்பாறி

அல்கி – தங்கி

கடும்பு – சுற்றம்

ஆரி – அருமை

படுகர் – பள்ளம்

நரலும் – ஒலிக்கும்

வேவை – வெந்தது

பொம்மல் – சோறு

வயிரியம் – கூத்தர்

இறடி – தினை

பாடலின் பொருள்

நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர் . பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல் .

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள் : இரவில் சேர்ந்து தங்குங்கள் : எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள் சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள் ; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள் . அங்குள்ளவர்களிடம் , ‘ பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் ‘ என்று சொல்லுங்கள்.

அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள் . உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர் . நீண்ட வழியைக் கடந்துவந்த உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக் கூறுவர் . அங்கே . நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் . ”  

பகுபத உறுப்பிலக்கணம்

மலைந்து – மலை + த் ( ந் ) + த் + உ

மலை – பகுதி

த் – சந்தி ‘ ந் ‘ ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

பொழிந்த – பொழி + த் ( ந் ) + த் + அ

பொழி – பகுதி

த் – சந்தி ‘ ந் ‘ ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

இலக்கணக் குறிப்பு

அசைஇ , கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்

பரூஉக் , குரூஉக்கண் – சொல்லிசை அளபெடைகள்

ஆற்றுப்படுத்தும் கூத்தன் , வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து , யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம் , நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை .

நூல் வெளி

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘ மலைபடுகடாம் ‘ . 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது ; மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது .

நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: