கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு, திருக்கேதாரம்

கல்வி அழகே அழகு

மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர் . அவை தங்கம் , வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன . ஆனால் மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என்பதைக் கூறும் நீதிநெறி விளக்கப்பாடல் ஒன்றை அறிவோம் .

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார் “

-குமரகுருபரர்

சொல்லும் பொருளும்

கலன் – அணிகலன்

முற்ற – ஒளிர

பாடலின் பொருள்

ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை . அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும் . ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை .

நூல் வெளி

குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் . இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார் . கந்தர் கலிவெண்பா , கயிலைக் கலம்பகம் , சகலகலாவல்லி மாலை , மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் , முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும் .

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது . கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன . இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது .

நாலடியார் பாடலைப் படிததுச் சுவைக்க

கல்வி கரையில கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

கற்றவருக்கு அழகு தருவது ___

அ ) தங்கம் ஆ ) வெள்ளி இ ) வைரம்  ஈ ) கல்வி

‘ கலனல்லால் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கலன் + லல்லால் ஆ ) கலம் + அல்லால் இ ) கலன் + அல்லால் ஈ ) கலன் + னல்லால்

புத்தியைத் தீட்டு

அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்று . அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும் . வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று . அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும் . இக்கருத்துகளை விளக்கும் பாடல் ஒன்றை அறிவோம் .

கத்தியைத் தீட்டாதே – உந்தன்

புத்தியைத் தீட்டு

கண்ணியம் தவறாதே – அதிலே

திறமையைக் காட்டு !

ஆத்திரம் கண்ணை

மறைத்திடும் போது

அறிவுக்கு வேலை கொடு -உன்னை

அழித்திட வந்த

பகைவன் என்றாலும்

அன்புக்குப் பாதை விடு !

( கத்தியைத் )

மன்னிக்கத் தெரிந்த

மனிதனின் உள்ளம்

மாணிக்கக் கோயிலப்பா – இதை

மறந்தவன் வாழ்வு

தடம் தெரியாமல்

மறைந்தே போகுமப்பா !

( கத்தியைத் )

இங்கே இருப்பது சில காலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை

எண்ணிப்பாரு தெளிவாகும் !

( கத்தியைத் )

-ஆலங்குடி சோமு

சொல்லும் பொருளும்

தடம் – அடையாளம்

அகம்பாவம் – செருக்கு

நூல் வெளி

ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர் . சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் . தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர் .

இவரது திரையிசைப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ____ இன்றி வாழ்ந்தார் .

அ ) சோம்பல் ஆ ) அகம்பாவம் இ ) வருத்தம் ஈ ) வெகுளி

 ‘ கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கோ + அப்பா ஆ ) கோயில் + லப்பா இ ) கோயில் + அப்பா ஈ ) கோ + இல்லப்பா

பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) பகைவென்றாலும் ஆ ) பகைவனென்றாலும் இ ) பகைவன்வென்றாலும் ஈ ) பகைவனின்றாலும்

திருக்கேதாரம்

உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை . இது மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது . இசைக்கருவிகளின் ஓசையாடு பாடல் இணையும்போது அது செவிகளுக்கு மட்டுமன்றிச் சிந்தைக்கும் விருந்தாகிறது . தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் தேவாரப்பாடல் ஒன்றை அறிவோம் .

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய

மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே .

– சுந்தரர்

சொல்லும் பொருளும்

பண் – இசை

கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை

மதவேழங்கள் – மதயானைகள்

முரலும் – முழங்கும்

பழவெய் – முதிர்ந்த மூங்கில்

பாடலின் பொருள்

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும் . கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும் . நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும் . இவற்றால் இடையறாது எழும் ‘ கிண் ‘ என்னும் ஒலியானது இசையாக முழங்கும் . இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும் .

நூல் வெளி

சுந்தரர் , தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் . இவர் நம்பியாரூரர் , தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார் . இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்படுள்ளன . இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார் .

திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும் . இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார் . இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது .

தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும் , தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும் . பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

காட்டிலிருந்து வந்த கரும்பைத் தின்றன .

அ ) முகில்கள் ஆ ) முழவுகள் இ ) வேழங்கள் ஈ ) வேய்கள்

‘ கனகச்சுனை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கனகச் + சுனை ஆ ) கனக + சுனை இ ) கனகம் + சுனை  ஈ ) கனம் + சுனை

முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) முழவுதிர ஆ ) முழவுதிரை இ ) முழவதிர ஈ ) முழவுஅதிர

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: