கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம்

கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று . கடலோடு வாழ்ந்த தமிழர் , தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து , அதனைக் கொண்டு மீன்பிடித்தும் , வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர் . கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம் . அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம் .

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை

– கடியலூர் உருத்திரங் கண்ணனார்

சொல்லும் பொருளும்

மதலை – தூண்

சென்னி – உச்சி

ஞெகிழி – தீச்சுடர்

உரவுநீர் – பெருநீர்ப் பரப்பு

அழுவம் – கடல்

கரையும் – அழைக்கும்

வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது , திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது ; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது : வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது . அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு , கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது .

நூல் வெளி

கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர் . இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் . இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை , பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார் .

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன் . இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன . வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர் , பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற , பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும் .

தெரிந்து தெளிவோம்

பத்துப்பாட்டு நூல்கள்

 திருமுருகாற்றுப்படை

மதுரைக்காஞ்சி

பொருநராற்றுப்படை

நெடுநல்வாடை

பெரும்பாணாற்றுப்படை

 குறிஞ்சிப்பாட்டு

சிறுபாணாற்றுப்படை

பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு

மலைபடுகடாம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

வேயாமாடம் எனப்படுவது

அ ) வைக்கோலால் வேயப்படுவது ஆ ) சாந்தினால் பூசப்படுவது இ ) ஓலையால் வேயப்படுவது ஈ ) துணியால் மூடப்படுவது

உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ ) காற்று ஆ ) வானம் இ ) கடல் ஈ ) மலை

கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன

அ ) மீன்கள் ஆ ) மரக்கலங்கள் இ ) தூண்கள் ஈ ) மாடங்கள்

தூண் என்னும் பொருள் தரும் சொல்

அ ) ஞெகிழி ஆ ) சென்னி இ ) ஏணி ஈ ) மதலை

கவின்மிகு கப்பல்

கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை . அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும் . அச்சம் தரும் கடலில் , அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர் . காற்றின் துணைகொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறத்தைச் சங்கப்பாடலின்வழி அறிவோமா ?

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ

இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி

விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட

கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்

மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய

– மருதன் இளநாகனார்

சொல்லும் பொருளும்

உரு – அழகு

வங்கம் – கப்பல்

போழ – பிளக்க

எல் – பகல்

வங்கூழ் – காற்று

கோடு உயர் – கரை உயர்ந்த

நீகான் – நாவாய் ஓட்டுபவன்

மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

பாடலின் பொருள்

உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய் . அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் . இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும் . உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் .

நூல் வெளி

மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் . கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே . மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார் .

அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று . புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது . இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர் . இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது .

தெரிந்து தெளிவோம்

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

பரிபாடல்

குறுந்தொகை

கலித்தொகை

ஐங்குறுநூறு

அகநானூறு

பதிற்றுப்பத்து

புறநானூறு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

இயற்கை வங்கூழ் ஆட்ட -அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ ) நிலம் ஆ ) நீர் இ ) காற்று ஈ ) நெருப்பு

மக்கள்____ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்

அ ) கடலில் ஆ ) காற்றில் இ ) கழனியில் ஈ ) வங்கத்தில்

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது

அ ) காற்று ஆ ) நாவாய் இ ) கடல் ஈ ) மணல்

‘ பெருங்கடல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) பெரு + கடல் ஆ ) பெருமை + கடல் இ ) பெரிய + கடல் ஈ ) பெருங் + கடல்

இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) இன்றுஆகி ஆ ) இன்றிஆகி இ ) இன்றாகி ஈ ) இன்றாஆகி

எதுகை இடம்பெறாத இணை

அ ) இரவு – இயற்கை ஆ ) வங்கம் சங்கம் இ உலகு -புலவு ஈ ) அசைவு இசைவு

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: