ஓ என் சமகாலத் தோழர்களே !, உயிர்வகை

ஓ என் சமகாலத் தோழர்களே !

– வைரமுத்து

அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம் . எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர் . அவ்வகையில் அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற தம் விழைவை இப்பாடல் மூலம் கவிஞரும் வெளிப்படுத்துகின்றார் .

கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்

கிழக்கு வானம் தூரமில்லை

முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்

பூமி ஒன்றும் பாரமில்லை

பாய்ந்து பரவும் இளைய நதிகளே

பள்ளம் நிரப்ப வாருங்கள்

காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்

கதிர்கள் சுமந்து தாருங்கள்

முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்

முதுகில் சுமந்தால் போதாது

சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்த

துணிந்தால் துன்பம் வாராது

காட்டும் பொறுமை அடக்கம் என்னும்

கட்டுப் பாட்டைக் கடவாதீர்

கூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க்

கோலம் கொள்ளும் மறவாதீர்

அறிவை மறந்த உணர்ச்சி என்பது

திரியை மறந்த தீயாகும்

எரியும் தீயை இழந்த திரிதான்

உணர்ச்சி தொலைந்த அறிவாகும்

பழையவை எல்லாம் பழமை அல்ல

பண்பும் அன்பும் பழையவைதாம்

இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க

இனமும் மொழியும் புதியவைதாம்

அறிவியல் என்னும் வாகனம் மீதில்

ஆளும் தமிழை நிறுத்துங்கள்

கரிகா லன்தன் பெருமை எல்லாம்

கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்

ஏவும் திசையில் அம்பைப் போல

இருந்த இனத்தை மாற்றுங்கள்

ஏவு கணையிலும் தமிழை எழுதி

எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் .

இலக்கணக்குறிப்பு

பண்பும் அன்பும் , இனமும் மொழியும் – எண்ணும்மைகள் .

சொன்னோர் – வினையாலணையும் பெயர்.

பகுபத உறுப்பிலக்கணம்

பொருத்துங்கள் – பொருத்து + உம் + கள்

பொருத்து – பகுதி

உம் – முன்னிலைப் பன்மை விகுதி

கள் – விகுதி மேல் விகுதி

நூல் வெளி

கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர் . இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர் . கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் . இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர் . இவருடைய கவிதைகள் இந்தி , தெலுங்கு , மலையாளம் , வங்காளம் , ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது .

இலக்கியங்களில் அறிவியல்

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி “

புறநானூறு

பாடல் 27 , அடி 7-8 .

அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்

தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்

வெந்திற லான் , பெருந் தச்சனைக் கூவி , ” ஓர்

எந்திர வூர்திஇ யற்றுமின் ” என்றான் .

– சீவக சிந்தாமணி

– நாமகள் இலம்பகம் 50 .

உயிர்வகை

– தொல்காப்பியர்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல உணர்வுகளின் வாயிலாகவே அறிவு என்பதை நாம் பெறுகிறோம் . இதற்குரிய பொறிகளான கண் , காது , வாய் , மூக்கு , உடல் என்னும் ஐந்து உறுப்புகளில் எது குறைந்தாலும் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை இழந்துவிடுவோம் . ஆனால் , அனைத்து உயிரினங்களுக்கும் இந்தப் புலன் அறிவுகள் எல்லாம் இருப்பதில்லை . இதைக் கொண்டு உயிரினங்களைப் புலன்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னோர் பகுத்தனர் . ஆறாவது அறிவு மனத்தால் அறியப்படுவது என்பர் .

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

( நூ.எ .1516 )

பகுபத உறுப்பிலக்கணம்

நெறிப்படுத்தினர் – நெறிப்படுத்து + இன் + அர்

நெறிப்படுத்து – பகுதி

இன் – இறந்தகால இடைநிலை

அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

இலக்கணக்குறிப்பு

உணர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

அறிவுநிலைஅறியும் ஆற்றல்உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு
ஓரறிவுஉற்றறிதல் ( தொடுதல் உணர்வு )புல் , மரம்
ஈரறிவுஉற்றறிதல் + சுவைத்தல்சிப்பி , நத்தை
மூவறிவுஉற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்கரையான் , எறும்பு
நான்கறிவுஉற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல்நண்டு , தும்பி
ஐந்தறிவுஉற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்பறவை , விலங்கு
ஆறறிவுஉற்றறிதல்  + சுவைத்தல் + நுகர்தல் + காணல்+ கேட்டல் + பகுத்தறிதல் ( மனம் )மனிதன்

நூல் வெளி

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம் . இதனை இயற்றியவர் தொல்காப்பியர் . தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது . இது எழுத்து , சொல் , பொருள் என மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டுள்ளது . எழுத்து , சொல் அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது . பொருளதிகாரத்தில் தமிழரின் அகம் , புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது . இந்நூலில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன . குறிப்பாகப் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர் . இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும் .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: