ஓடை, கோணக்காத்துப் பாட்டு

ஓடை

மனிதர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது . கவின்மிகு காலைப்பொழுதும் , மயக்கும் மாலைப்பொழுதும் , பிறை நிலவும் , ஓடும் ஓடையும் , பாயும் ஆறும் , கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை . அவ்வாறு மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள் !

” ஓடை ஆட உள்ளம் தூண்டுதே ! – கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

( ஓடை ஆட … )  

பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி !

ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போராரோடி !

( ஓடை ஆட … )

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

( ஓடை ஆட … )  

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்

 ( ஓடை ஆட … )

-வாணிதாசன்

சொல்லும் பொருளும்

தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்

பயிலுதல் – படித்தல்

 ஈரம் – இரக்கம்

நாணம் – வெட்கம்

முழவு – இசைக்கருவி

செஞ்சொல் – திருந்திய சொல்

நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

வள்ளைப்பாட்டு – நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

பாடலின் பொருள்

நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே ! கற்களில் உருண்டும் . தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே ! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும் ?

நன்செய் , புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது . அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது . கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது . குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது . நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது . சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது .

 நூல் வெளி

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன் . அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும் . இவர் பாரதிதாசனின் மாணவர் . தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் , பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர் . கவிஞரேறு , பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர் . இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது . தமிழச்சி , கொடிமுல்லை , தொடுவானம் , எழிலோவியம் , குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும் .

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

 பள்ளிக்குச் சென்று கல்வி ____சிறப்பு .

அ ) பயிலுதல் ஆ ) பார்த்தல் இ ) கேட்டல் ஈ ) பாடுதல்

செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது

அ ) கடல் ஆ ) ஓடை இ ) குளம் ஈ ) கிணறு

 ‘ நன்செய் ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) நன் + செய் ஆ ) நன்று + செய் இ ) நன்மை + செய் ஈ ) நல் + செய்

நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) நீளு + உழைப்பு ஆ ) நீண் + உழைப்பு இ ) நீள் + அழைப்பு ஈ ) நீள் + உழைப்பு

சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) சீருக்குஏற்ப ஆ ) சீருக்கேற்ப இ ) சீர்க்கேற்ப ஈ ) சீருகேற்ப

ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) ஓடைஆட ஆ ) ஓடையாட இ ) ஓடை யோட ஈ ) ஓடைவாட

கோணக்காத்துப் பாட்டு

இயற்கை மிகவும் அழகானது ; அமைதியானது ; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது . ஆனால் அது சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் . தமிழ்நாடு அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும் . முன்பு ஒருமுறை தமிழ்நாடு புயலால் தாக்குண்டபோது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல்களை அறிவோம் .

 உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து

உளன்று உளன்றுமெத்த அடித்ததினால்

பெரிதான வீடுகளெல்லாம் – கோப்புடனே

பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே

சிங்காரமாய் வாங்கல்நகரில் – வைத்திருந்த

தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே

மங்காத காங்கயநாட்டில் – மேட்டுக்காட்டில்

மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே

 ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் – மெத்தைவீடு

அடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்

தாரங்களும் பிள்ளைகளுடன் – கூட்டிக்கொண்டு

தானடந்து வேகமுடன் கூகூவென்றார்

வாகுடனே தொண்டைமான்சீமை – தன்னிலே

வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானே

சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்

சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே

சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் – கடலிலே

தானடந்து வேகமுடன் வரும்போதிலே

கொம்புசுத்திக் கோணக்காத்து – காலனைப்போல்

கோணமழை வந்துகப்பல் தான்கவிழ்ந்ததே

ஆர்க்காடு மைசூர்வரைக்கும் – கோணக்காத்து

அலறி அலறிமெத்த அடித்ததனால்

மார்க்கமான சாலையில்போன சனங்களெல்லாம்

மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களே

தெத்துக்காடு காளப்பநாயக்கன் – பட்டியிலே

செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்

சித்தர்கள் பொருந்திவாழும் – கொல்லிமலை

சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே

இப்படிக்கிச் சேதங்களானால் – குமரேசா

எப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்

மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு – வருகின்ற

விக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திடீரையா

– வெங்கம்பூர் சாமிநாதன்

சொல்லும் பொருளும்

முகில் – மேகம்

வின்னம் – சேதம்

கெடிகலங்கி –  மிக வருந்தி

வாகு – சரியாக

சம்பிரமுடன் – முறையாக

காலன் – எமன்

சேகரம் – கூட்டம்

மெத்த – மிகவும்

காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

பாடலின் பொருள்

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன . வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின . அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின .

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன . ஆடவர்கள் மனைவி , பிள்ளைகளுடன் ‘ கூகூ ‘ என்று அலறியபடி ஓடினர் . தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன . கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது .

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர் . துக்காடு , காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன . சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது

 முருகப் பெருமானே ! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம் ? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக !

நூல் வெளி

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் , மக்கள் பட்ட துயரங்களை , அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர் . பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன . புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

வானில் கரு ____ தோன்றினால் மழை பொழியும் என்பர் .

அ ) முகில் ஆ ) துகில் இ ) வெயில்  ஈ ) கயல்

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____ யும் ஓட்டிவிடும் .

அ ) பாலனை ஆ ) காலனை இ ) ஆற்றலை  ஈ ) நலத்தை

‘ விழுந்ததங்கே ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

அ ) விழுந்த + அங்கே ஆ )விழுந்த + ஆங்கே இ ) விழுந்தது + அங்கே ஈ ) விழுந்தது + ஆங்கே

 ‘ செத்திறந்த ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) செ + திறந்த ஆ ) செத்து + திறந்த இ ) செ + இறந்த ஈ ) செத்து + இறந்த

பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .

அ ) பருத்திஎல்லாம் ஆ ) பருத்தியெல்லாம் இ ) பருத்தெல்லாம் ஈ ) பருத்திதெல்லாம்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: