ஒளியின் அழைப்பு, தாவோ தே ஜிங்

ஒளியின் அழைப்பு

– ந.பிச்சமூர்த்தி

புவிஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி விரைவது தாவரத்தின் தனித்துவம் . வேர் வளர்க்கும் கதிரவன் ஒளியும் காற்றும் நீரும் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் பாறையும் என எல்லாம் இணைந்தே இயற்கையைப் போற்றி வளர்க்கின்றன . போட்டியின்றி வாழ்க்கையில்லை : வலிகளின்றி வெற்றியில்லை . ஒன்றையொன்று அடுத்தும் படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று , வாழ்க்கைக்கும்தான் !

பிறவி இருளைத் துளைத்து

சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி

எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது

ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி

எப்படி உடலை நெளித்து நீட்டி , வளைத்து வளருகிறது

எப்படி அமிருதத்தை நம்பி , ஒளியை வேண்டி

பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது

அதுவே வாழ்க்கைப் போர்

முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி ,

-ந.பிச்சமூர்த்தி

சொல்லும் பொருளும்

விண் – வானம் ;

ரவி – கதிரவன் ;

கமுகு –பாக்கு

பாடலின் பொருள்

கமுகு மரம் , தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது . பெருமரத்தின் நிழலை வெறுத்தது . உச்சிக்கிளையை மேலே உயர்த்தியது . விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் ( அமுதை ) தேடியது . மீண்டும் மீண்டும் உயர்ந்து உயரே கதிரவன் ஒளிக்கதிர்களாகிய விரல்களின் அழைப்பைக் கண்டதும் . பெருமரத்தின் இருட்டில் இருந்துகொண்டே தன் கிளைகளை வளைத்து , நீட்டியது.

அமுதத்தை நம்பி , ஒளியை வேண்டிக் கமுகு அப்பெருமரத்துடன் போட்டி போடுகிறது . இதுதான் வாழ்க்கைப்போர் . வாழ்க்கை உறுதிபெற வேண்டுமென்றால் போட்டியிட்டு , போரிட்டே ஆக வேண்டும் . பெருமரத்துடன் முட்டி மோதி மேலே செல்லும் துணிச்சலே இன்பம் . முயற்சி உள்ளனவே வாழ்வில் மலர்ச்சி பெறும் . கமுகுமரம் கடுமையாகப் பெருமரத்தோடு முட்டிமோதித் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டது . நம்பிக்கை , தன்முனைப்போடு கூடிய போட்டியில் கமுகு வென்றது . பெருமரத்தை விஞ்சி வளர்ச்சி நடை போடுகிறது .

இலக்கணக் குறிப்பு

பிறவிஇருள் , ஒளியமுது , வாழ்க்கைப்போர் – உருவகங்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

போகிறது = போ + கிறு + அ + து

போ – பகுதி ;

கிறு – நிகழ்கால இடைநிலை ;

அ – சாரியை.

து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி .

மலர்ச்சி = மலர் + ச் + சி

மலர் –பகுதி ;

ச் – பெயர் இடைநிலை ;

சி – தொழிற்பெயர் விகுதி

வேண்டி = வேண்டு + இ

வேண்டு- பகுதி

இ – வினையெச்சவிகுதி

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து , அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் -‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ‘ என்னும் நூலில் வல்லிக்கண்ணன் .

நூல் வெளி

புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன . பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந . பிச்சமூர்த்தி ஈடுபட்டார் . எனவே , அவர் ” புதுக்கவிதையின் தந்தை ” என்று போற்றப்படுகிறார் . புதுக்கவிதையை ” இலகு கவிதை , கட்டற்ற கவிதை , விலங்குகள் இலாக் கவிதை , கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர் .

ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார் . ஹனுமான் , நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார் . இவர் புதுக்கவிதை , சிறுகதை , ஓரங்க நாடகங்கள் , கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர் . இவரின் முதல் சிறுகதை ‘ ஸயன்ஸூக்கு பலி “ என்பதாகும் . 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார் . பிக்ஷ , ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார் .

தாவோ தே ஜிங்

– லா வோட்சு

இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளுக்குள் உள்ளடங்கியது வாழ்க்கை . ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப் பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்து விடுகின்றன . உண்டு . இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதைச் சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார் . எந்த ஒன்றும் உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும் ; இல்லையும் வேண்டும் என்ற கருத்தைக் கூறுவது இவர் படைத்த இக்கவிதை .

ஆரக்கால் முப்பதும்

சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன ;

ஆனால் , சக்கரத்தின் பயன்

அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது .

பாண்டம் பாண்டமாகக்

களிமண் வனையப்படுகிறது ;

ஆனால் , பாண்டத்தின் பயன்

அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது .

வீட்டுச் சுவர்களில்

வாயிலுக்காகவும் சன்னலுக்காவும்

வெற்றுவெளியை விடுகிறோம் ;

ஆனால் , வாயிலும் சன்னலும்

வெற்றுவெளி என்பதால் பயன்படுகின்றன .

எனவே , ஒரு பக்கம்

இருத்தலின் பலன் கிடைக்கிறது ;

இன்னொரு பக்கம்

இருத்தலின்மையைப் பயன்படுத்திக்கொள்கிறோம் .

பாடலின் பொருள்

சக்கரம் பல ஆரங்களைக் கொண்டதாயினும் அவற்றிடையே உள்ள வெற்றிடத்தை மையமாக வைத்தே சுழல்கிறது : அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பானையாயினும் அதன் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது : வீட்டிலுள்ள சாளரமும் கதவும்கூடச் சுவரின் வெற்றிடமே ; அதுவே நமக்குப் பயன்பாடு . சுவர்களுக்கிடையேஉள்ள வெற்றிடமே அறையாக நமக்குப் பயன்படுகிறது .

நம் பார்வையில் படும் உருப்பொருள்கள் உண்மை எனினும் , உருவம் இல்லாத வெற்றிடமே நமக்குப் பயன் உடையதாகிறது . வெற்றிடமே பயன் உடையதாகுமெனில் நாம் வெற்றி பெறத் தடை ஏதும் உண்டோ ?

( வாழ்க்கை மிகவும் விரிவானது . அதன் சில பகுதிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம் . உணர்கிறோம் . நாம் பயன்படுத்தாத அந்தப் பகுதிகளும் சுவை மிகுந்தவை ; பொருள் பொதிந்தவை . வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் சுவைத்து , நம் வாழ்க்கையைப் பொருளுடையதாக்குவோம் . )

தத்துவ விளக்கம்

இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது . குடம் செய்ய மண் என்பது உண்டு . குடத்திற்குள்ளே வெற்றிடம் என்பது இல்லை . இந்த உண்டும் இல்லையும் சேர்வதால்தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும் . வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது . இவை முரண்களாகத் தெரிந்தாலும் இவை முரண்களல்ல . அதை வலியுறுத்தவே இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்கிறார் கவிஞர் . ஆரங்களைவிட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது . குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது . சுவர்களைவிட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது . ஆகவே , ‘ இன்மை ‘ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது அவர் கருத்து .

பகுபத உறுப்பிலக்கணம்

இணைகின்றன = இணை + கின்று + அன் + அ

இணை – பகுதி

கின்று – நிகழ்கால இடைநிலை

அன் – சாரியை

அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

இலக்கணக் குறிப்பு

பாண்டம் பாண்டமாக – அடுக்குத்தொடர்

வாயிலும் சன்னலும் – எண்ணும்மை

நூல் வெளி

லாவோட்சு , சீனாவில் பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர் . சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர் . அக்காலம் , சீனச் சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது . லாவோட்சு ” தாவோவியம் ” என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர் . ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார் . லாவோட்சுவோ இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார் . தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது . பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: