ஒரு வேண்டுகோள்

ஒரு வேண்டுகோள்

கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன . ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான் . கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது . அது மானுடத்தைப் பேச வேண்டும் . இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர் . அதனை அறிவோம் .

கலையுலகப் பிரும்மாக்களே

மண்ணின் வனப்புக்குப்

புதிய அழகுகள் சேர்ப்பவர்களே

ஒரு மானுடத்தின் வேண்டுகோள்

நீங்கள் சிற்பிகளாகப்

பாறை உடைப்பவனின்

சிலை வடித்தால்

வியர்வை நெடி வீசட்டும் அதில்

வயல்வெளி உழவனின்

உருவ வார்ப்பெனில்

ஈரமண் வாசம்

இருக்க வேண்டும் அதில்

ஓவியர்களாகத்

தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால்

அவள் முகப்பொலிவில்

வழித்தெடுக்குமாறு இருக்கட்டும்

கரிசன பாச உணர்வுகள்

ஒரு சின்ன மழலைச் சித்திரமா

பால் மணம் கமழ வேண்டும் .

அதன் பளிங்கு மேனியில்

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா

அட்லாண்டிக் சமுத்திர அலைகளா

அமேசான் காடுகளா

பனிபடர் பள்ளத்தாக்குகளா

தொங்கும் அதிசயத் தோட்டங்களா

இயற்கையின் பிரமிப்பு எதுவும்

கலைவடிவு கொள்ளலாம்

ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்

மானுட அடையாளம் ஒன்று

இருக்கவேண்டும் அதில் கட்டாயம்

மனிதன் இல்லாத இணையாத

எந்த வனப்பும் வனப்பில்லை

அவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை …

-தேனரசன்

சொல்லும் பொருளும்

பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்

வனப்பு – அழகு

நெடி – நாற்றம்

பூரிப்பு – மகிழ்ச்சி

மழலை – குழந்தை

மேனி – உடல்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே ! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே ! உங்களுக்கு ஒரு மனிதச் சமுதாயத்தின் வேண்டுகோள் !

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால் , அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும் . உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால் , அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும் .

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால் , அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும் . சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும் .

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் , அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள் , அமேசான் காடுகள் , பனிபடர் பள்ளத்தாக்குகள் , தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம் . ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும் . மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று . மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

நூல் வெளி

தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் . இவர் வானம்பாடி , குயில் , தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார் . இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும் . மண்வாசல் , வெள்ளை ரோஜா , பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார் . பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

மயிலும் மானும் வனத்திற்கு _____ தருகின்றன .

அ ) களைப்பு ஆ ) வனப்பு இ ) மலைப்பு ஈ ) உழைப்பு

மிளகாய் வற்றலின்______ தும்மலை வரவழைக்கும் .

அ ) நெடி ஆ )காட்சி இ ) மணம் ஈ ) ஓசை

அன்னை தான் பெற்ற_____சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார் .

அ ) தங்கையின் ஆ ) தம்பியின் இ ) மழலையின் ஈ ) கணவனின்

‘ வனப்பில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வனம் + இல்லை ஆ ) வனப்பு + இல்லை இ ) வனப்பு + யில்லை ஈ ) வனப் + பில்லை

‘ வார்ப்பு + எனில் ‘ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) வார்ப்எனில் ஆ ) வார்ப்பினில் இ ) வார்ப்பெனில் ஈ ) வார்ப்பு எனில்

கீரைப்பாத்தியும் குதிரையும் ( இரட்டுற மொழிதல் )

தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன . ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று . இதனைச் ‘ சிலேடை ‘ என்றும் கூறுவர் . அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம் .

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே  

– காளமேகப்புலவர்

சொல்லும் பொருளும்

வண்கீரை –வளமான கீரை

பரி –குதிரை

முட்டப்போய் – முழுதாகச் சென்று

கால் – வாய்க்கால் , குதிரையின் கால்

மறித்தல் –தடுத்தல் ( மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல் ) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில்

மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர் : மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர் ; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர் ; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும் .

குதிரை

வண்டிகளில் கட்டி , அடித்து ஓட்டப்படும் : கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும் ; எதிரிகளை மறித்துத் தாக்கும் ; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும் .

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும் , ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும் .

நூல் வெளி

காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன் . மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார் . திருவானைக்கா உலா , சரசுவதி மாலை , பரபிரம்ம விளக்கம் . சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார் . இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன . அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது .

இருபொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி , அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக .

( எ.கா. ) மாலை – மலர் மாலை , அந்திப் பொழுது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

‘ஏறப் பரியாகுமே ‘ என்னும் தொடரில் ‘ பரி ‘ என்பதன் பொருள்

அ ) யானை ஆ ) குதிரை இ ) மான் ஈ ) மாடு

பொருந்தாத ஓசை உடைய சொல்

அ ) பாய்கையால் மேன்மையால் இ ) திரும்புகையில் ஈ ) அடிக்கையால்

‘ வண்கீரை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வண் + கீரை வண்ணம் + கீரை இ ) வளம் + கீரை ஈ ) வண்மை + கீரை

கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) கட்டியிடித்தல் ஆ ) கட்டியடித்தல் இ ) கட்டிஅடித்தல் ஈ ) கட்டுஅடித்தல்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: