ஏர் புதிதா ? – மெய்க்கீர்த்தி

ஏர் புதிதா ?

-கு.ப.ராஜகோபாலன்

சங்கத் தமிழரின் திணைவாழ்வு , வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது . உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர் . உழவே தலையான தொழில் என்றாயிற்று . உழவு , தொழிலாக இல்லாமல் பண்பாடாகவும் திகழ்ந்தது . இன்று உழுவோர் அச்சாணி என்ற கருத்தைப் புதுப்பிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது . உழவுண்டெனில் உயர்வுண்டு என்ற குரல் இன்றும் தொடர்கிறது . தமிழ் மரபின் ‘ பொன் ஏர் பூட்டுதல் ‘ என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும் .

முதல்மழை விழுந்ததும்

மேல்மண் பதமாகிவிட்டது .

வெள்ளி முளைத்திடுது , விரைந்துபோ நண்பா !

காளைகளை ஓட்டிக் கடுகிச்செல் , முன்பு !

பொன் ஏர் தொழுது , புலன் வழிபட்டு

மாட்டைப் பூட்டி

காட்டைக் கீறுவோம் .

ஏர் புதிதன்று , ஏறும் நுகத்தடி கண்டது ,

காடு புதிதன்று , கரையும் பிடித்ததுதான்

கை புதிதா , கார் புதிதா ? இல்லை .

நாள்தான் புதிது , நட்சத்திரம் புதிது !

ஊக்கம் புதிது , உரம் புதிது !

மாட்டைத் தூண்டி , கொழுவை அமுத்து

மண்புரளும் , மழை பொழியும் ,

நிலம் சிலிர்க்கும் , பிறகு நாற்று நிமிரும் .

எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும் ;

கவலையில்லை !

கிழக்கு வெளுக்குது

பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்

நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை .

வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன்ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும் .

நூல் வெளி

‘ ஏர் புதிதா ? ‘ எனும் கவிதை கு.ப.ரா.படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது . 1902 இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் , கவிஞர் , நாடக ஆசிரியர் , மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர் . தமிழ்நாடு , பாரதமணி , பாரத்தேவி , கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் . இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை , ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன .

மெய்க்கீர்த்தி

-இரண்டாம் இராசராச சோழன்

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள் : அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள் . சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி ! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் . சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது : செப்பமான வடிவம் பெற்றது ; கல்இலக்கியமாய் அமைந்தது.

இராசராசன் காலத் தமிழ் கல்வெட்டு , 11 ஆம் நூற்றாண்டு , பெரிய கோயில் , தஞ்சாவூர் .

இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச்சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன

வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன

மாமலரே கடியவாயின்

காவுகளே கொடியவாயின

கள்ளுண்பன வண்டுகளே

பொய்யுடையன வரைவேயே

போர்மலைவன எழுகழனியே

மையுடையன் நெடுவரையே

மருளுடையன இளமான்களே

கயற்குலமே பிறழ்ந்தொழுகும்

கைத்தாயரே கடிந்தொறுப்பார்

இயற்புலவரே பொருள்வைப்பார்

இசைப் பாணரே கூடஞ்செய்வார்

என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல்இதுவென

நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது

தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும்

மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும்

விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும்

எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய்

பாடலின் பொருள்

இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன் . அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன ( மக்கள் பிணிக்கப்படுவதில்லை ) . சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன ( மக்கள் புலம்புவதில்லை ) . ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன ( மக்கள் கலக்கமடைவதில்லை ) . புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது ( மக்கள் அடைக்கப்படுவதில்லை ) .

மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன ( மக்கள் வடுப்படுவதில்லை ) . மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன ( மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை ) . காடுகள் மட்டுமே கொடியவனாய் – ( கொடி உடையனவாக ) உள்ளன ( மக்கள் கொடியவராய் இல்லை ) . வண்டுகள் மட்டுமே கள் – ( தேன் ) உண்ணுகின்றன ( மக்கள் கள் உண்பதில்லை ) . மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது ( மக்களிடையே வெறுமை இல்லை ) . வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன ( வேறு போர் இல்லை ) .

நீண்ட மலைகளே இருள் சூழ்ந்தவையாயிருக்கின்றன ( நாட்டில் வறுமை இருள் இல்லை ) . இளமான்களின் கண்களே மருள்கின்றன ( மக்கள் கண்களில் மருட்சியில்லை ) . குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன ( மக்கள் நிலை பிறழ்வதில்லை ) . செவிலித்தாயரே சினங் காட்டுவர் ( வேறு யாரும் சினம் கொள்வதில்லை ) . புலவர் பாட்டில் மட்டுமே பொருள் ( பொதிந்து ) இருக்கின்றது ( யாரும் பொருளை மறைப்பதில்லை ) . இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் ( தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை ) . இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது .

அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான் . தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான் . மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான் . உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான் . விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான் ; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான் .

நூல் வெளி

கோப்பரகேசரி , திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது . இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது . இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு . அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது . அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன . இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது . முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன . மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள் . இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: