எங்கள் தமிழ், ஒன்றல்ல இரண்டல்ல

எங்கள் தமிழ்

உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி . அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது ; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது : காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று , என்றும் இளமையோடு திகழ்வது . அத்தகு தமிழ்மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம் .

 அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

– நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கனார்

சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

விரதம் – நோன்பு

குறி – குறிக்கோள்

பொழிகிற – தருகின்ற

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி , அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது . அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது . தமிழ் மொழியைக் கற்றோர் , பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார் . தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார் .

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு , எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும் .

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும் ; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும் . எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும் .

நூல் வெளி

இப்பாடலின் ஆசிரியரை , நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர் . இவர் தமிழறிஞர் , கவிஞர் , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் . காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார் . தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் . மலைக்கள்ளன் , நாமக்கல் கவிஞர் பாடல்கள் , என்கதை , சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் . நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது .

நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க .

கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர் … ( கத்தியின்றி … )

கண்ட தில்லை கேட்ட தில்லை

சண்டை இந்த மாதிரி

பண்டு செய்த புண்ணி யந்தான்

பலித்த தேநாம் பார்த்திட ! … ( கத்தியின்றி … )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

 நெறி ‘ என்னும் சொல்லின் பொருள் _____

அ ) வழி ஆ ) குறிக்கோள் இ ) கொள்கை ஈ ) அறம்

‘ குரலாகும் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) குரல் + யாகும் ஆ ) குரல் + ஆகும் இ ) குர + லாகும் ஈ ) குர + ஆகும்  

வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) வான்ஒலி ஆ ) வானொலி இ ) வாவொலி ஈ ) வானெலி

ஒன்றல்ல இரண்டல்ல

தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது . அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது . தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர் . இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம் .

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல

ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி … )

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்

செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி … )

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்

பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்

பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி … )

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்

முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த

வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி … )

 – உடுமலை நாராயணகவி

சொல்லும் பொருளும்

முகில் – மேகம்

உபகாரி – வள்ளல்

ஒப்புமை – இணை

அற்புதம் – வியப்பு

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும் . அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும் . இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும் . சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும் . தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும் .

 பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம் . அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம் , புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும் .

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி . புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல் . இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும் .

நூல் வெளி

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி . இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் . தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் . நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் . இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

 பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

ஆ ) பரிபாடல் அ ) கலம்பகம் இ ) பரணி ஈ ) அந்தாதி

வானில் ______கூட்டம் திரண்டால் மழை பொழியும் .

அ ) அகில் ஆ ) முகில் இ ) துகில் ஈ ) துயில்

 ‘ இரண்டல்ல ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) இரண்டு + டல்ல ஆ ) இரண் + அல்ல இ ) இரண்டு + இல்ல ஈ ) இரண்டு + அல்ல

‘ தந்துதவும் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) தந்து + உதவும் ஆ ) தா + உதவும் இ ) தந்து + தவும் ஈ ) தந்த + உதவும்

ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) ஒப்புமைஇல்லாத ஆ ) ஒப்பில்லாத இ ) ஒப்புமையில்லாத ஈ ) ஒப்புஇல்லாத

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: