இளைய தோழனுக்கு

இளைய தோழனுக்கு

மனித உடலில் இரண்டு கைகள் உண்டு . உள்ளத்தில் இருக்கவேண்டிய ‘ கை ‘ ஒன்று உண்டு . அதுவே நம்பிக்கை . இது மக்கள் அனைவருக்குள்ளும் இருந்தாலும் , அதன் ஆற்றலை உணர்ந்து , வாழ்வுக்கு உறுதுணையாக்கி வாழ்வில் வென்றவர் சிலரே . உங்களுக்குள் துவண்டிருக்கும் நம்பிக்கையைத் தட்டி எழுப்பும் கவிதை ஒன்றை அறிவோம் .

நட

நாளைமட்டுமல்ல  

இன்றும்

நம்முடையதுதான்

நட

 பாதங்கள்

நடக்கத்

தயாராய் இருந்தால்

 பாதைகள்

மறுப்புச் சொல்லப்

போவதில்லை .

நெய்யாய்த் திரியாய்

நீயே மாறினால்

தோல்வியும் உனக்கொரு

தூண்டுகோலாகும் !

வெற்றி

உனைச்சுற்றி

வெளிச்சவிதை

விதைக்கும் !

கவலைகளைத்

தூக்கிக்கொண்டு

திரியாதே …

அவை

கைக்குழந்தைகளல்ல ..

ஓடிவந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா ?

உன்னுடன் நீயே

கைகுலுக்கிக் கொள் !

தூங்கி விழுந்தால்

பூமி உனக்குப்

படுக்கையாகிறது .

விழித்து நடந்தால்

அதுவே உனக்குப்

பாதையாகிறது !

நீ

விழித்தெழும் திசையே

பூமிக்குக் கிழக்கு !

உன்

விரல்களில் ஒளிரும்

சூரியவிளக்கு !

நட

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான்

நட !

-மு.மேத்தா

பாடலின் பொருள்

செயல்படத்தொடங்கு ! நாளை மட்டுமல்ல , இன்றும் நமது நாள்தான் . உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால் , நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப்போவதில்லை .

உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய் , திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும் ! வெற்றி உன் அங்கமாகி , வாழ்வில் ஒளியேற்றும் .

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம் . உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே ! உன்னைவிட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது .

 நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும் . நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும் .

நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு . கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும் . செயல்படத் தொடங்கு ! நாளை மட்டுமல்ல , இன்றும் நமது நாள்தான் .

நூல் வெளி

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு . மேத்தா . புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர் ; கண்ணீர்ப் பூக்கள் , ஊர்வலம் , சோழநிலா , மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார் ; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது .

மு . மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

உன்னுடன் நீயே ____ கொள் .

அ ) சேர்ந்து ஆ ) பகை இ ) கைகுலுக்கிக் ஈ ) நட்பு

கவலைகள் ____அல்ல

அ ) சுமைகள் ஆ ) சுவைகள் இ ) துன்பங்கள் ஈ ) கைக்குழந்தைகள்  

‘ விழித்தெழும் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) விழி + எழும் ஆ ) விழித்து + எழும் இ ) விழி + தெழும் ஈ ) விழித் + தெழும்  

‘ போவதில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) போவது + இல்லை ஆ ) போ + இல்லை இ ) போவது + தில்லை ஈ ) போவது + தில்லை

‘ படுக்கையாகிறது ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) படுக்கை + யாகிறது ஆ ) படுக்கையா + ஆகிறது இ ) படுக்கையா + கிறது ஈ ) படுக்கை + ஆகிறது

தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) தூக்கிகொண்டு ஆ ) தூக்குக்கொண்டு இ ) தூக்கிக்கொண்டு ஈ ) தூக்குகொண்டு

விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .

அ ) விழியெழும் ஆ ) விழித்தெழும் இ ) விழித்தழும் ஈ ) விழித்துஎழும்

தன்னை அறிதல்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும் . அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும் . நாம் யார் , நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும் . இக்கருத்தினை விளக்கும் கவிதை ஒன்றினை அறிவோம் .

அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு

அது குயில் குஞ்சு என்று தெரிந்தது

தெரிந்த பிறகு

இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது .

போய்விடு என்றது

பாவம் குயில் குஞ்சு !

அது எங்குப் போகும் ?

அதுக்கு என்ன தெரியும் ?

அது எப்படி வாழும் ?

குயில் குஞ்சும்

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது

அம்மா காக்கா கேட்கவில்லை

கிளம்பிப் போகச் சொல்லிவிட்டது

குயில் குஞ்சால் அம்மா காக்கையைப்

பிரியமுடியவில்லை

அதுவும் அந்த மரத்திலேயே

வாழ ஆரம்பித்தது

அம்மா காக்கையைப் போல ” கா ” என்று

அழைக்க முயற்சி செய்தது

ஆனால் அதற்குச் சரியாக வரவில்லை

அதற்குக் கூடு கட்டத் தெரியாது

பாவம் சிறிய பறவைதானே !

கூடு கட்ட அதற்கு யாரும்

சொல்லித் தரவும் இல்லை

அம்மா அப்பா இல்லை

தோழர்களும் இல்லை

குளிரில் நடுங்கியது

மழையில் ஒடுங்கியது

வெயிலில் காய்ந்தது

அதற்குப் பசித்தது

தானே இரை தேடத் தொடங்கியது

வாழ்க்கை எப்படியும்

அதை வாழப் பழக்கிவிட்டது

ஒரு விடியலில் குயில் குஞ்சு

 ” கூ ” என்று கூவியது

அன்று தானொரு

குயில் என்று கண்டு கொண்டது

-சே . பிருந்தா

கவிதையின் உட்பொருள்

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது . முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது . தனியே சென்று வாழ அஞ்சுகிறது . தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது . நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும் .

நூல் வெளி

சே.பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர் . மழை பற்றிய பகிர்தல்கள் , வீடு முழுக்க வானம் , மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார் .

இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

கூடு கட்டத் தெரியாத பறவை

அ ) காக்கை ஆ ) குயில் இ ) சிட்டுக்குருவி ஈ ) தூக்கணாங்குருவி

‘ தானொரு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) தா + ஒரு ஆ ) தான் + னொரு இ ) தான் + ஒரு ஈ ) தானே + ஒரு

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: