இன்பத்தமிழ்க் கல்வி

இன்பத்தமிழ்க் கல்வி

பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார் . எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார் . வானம்.ஓடை , காடு , தென்றல் , மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன . எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார் . அதை நாமும் படித்துச் சுவைப்போம் .

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

என்னை எழுதென்று சொன்னது வான்

ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்

ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்

காடும் கழனியும் கார்முகிலும் வந்து

கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்

ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்

அன்பினைச் சித்திரம் செய்க என்றார்

சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்

தோகை மயில்வரும் அன்னம் வரும்

மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்

மாணிக்கப் பரிதி காட்சி தரும்

வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்

வெற்பென்று சொல்லி வரைக என்னும்

கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து

கூவின என்னை – இவற்றிடையே

இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள

என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்

அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்

ஆவியில் வந்து கலந்ததுவே

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்

தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !

– பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

எத்தனிக்கும் – முயலும்

பரிதி –  கதிரவன்

வெற்பு – மலை

அன்னதோர் –  அப்படிஒரு

கழனி – வயல்

கார்முகில் – மழைமேகம்

நிகர் – சமம்

துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்

பாடலின் பொருள்

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன் . என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது . நீரோடையும் தாமரை மலர்களும் ” எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக ” என்றன . காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து , கவிதையில் இடம்பெற முயன்றன . ஆடும் மயில் போன்ற பெண்கள் ” அன்பினைக் கவிதையாக எழுதுக ” என்றனர் .

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது . பசுமையான தோகையையுடைய மயில் வந்தது . அன்னம் வந்தது . மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான் . வேல் ஏந்திய வீரர்கள் , ” மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் ” என்றனர் . இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின .

ஆனால் , துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள் . அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி , என் உயிரில் வந்து கலந்து விட்டது . இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும் . அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும் . நெஞ்சில் தூய்மை உண்டாகிடும் . வீரம் வரும் .

நூல் வெளி

கவிஞர் , இதழாளர் , தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன் . இவர் கவிதை , கதை , கட்டுரை , நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர் . பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இசையமுது , இருண்ட வீடு , குடும்ப விளக்கு , கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் . இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது . பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது

அ ) மயில் ஆ ) குயில் இ ) கிளி ஈ ) அன்னம்

பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக் குறிக்கும் சொல்

அ ) வெற்பு ஆ ) காடு இ ) கழனி ஈ ) புவி

‘ ஏடெடுத்தேன் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) ஏடெடு + தேன் ஆ ) ஏட்டு + எடுத்தேன் இ ) ஏடு + எடுத்தேன் ஈ ) ஏ + டெடுத்தேன்

 ‘ துயின்றிருந்தார் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) துயின்று + இருந்தார் ஆ ) துயில் + இருந்தார் இ ) துயின்றி + இருந்தார் ஈ ) துயின் + இருந்தார்

என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) என்றுஉரைக்கும் ஆ ) என்றிரைக்கும் இ ) என்றரைக்கும் ஈ ) என்றுரைக்கும் பொருத்துக .

அழியாச் செல்வம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர் . அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ . அழியவோ கூடும் . ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும் , அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம் .

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற

-சமண முனிவர்

சொல்லும் பொருளும்

வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்

கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது

வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்

விச்சை – கல்வி

பாடலின் பொருள்

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது . ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது . மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது . ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும் . மற்றவை செல்வம் ஆகா .

நூல் வெளி

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும் . இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும் . இது நானூறு வெண்பாக்களால் ஆனது . இந்நூலை நாலடி நானூறு என்றும் , வேளாண்வேதம் என்றும் அழைப்பர் . திருக்குறள் போன்றே அறம் , பொருள் , இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது . இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம் .

பாடல்

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்

வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு

மிகஎளிது கல்வி யென்னும்

உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்

பொருள்தேடி உழல்கின் றீரே

-தனிப்பாடல் திரட்டு .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்

அ ) வீடு ஆ ) கல்வி இ ) பொருள் ஈ ) அணிகலன்

கல்வியைப் போல் செல்வம் வேறில்லை .

அ ) விலையில்லாத ஆ ) கேடில்லாத இ ) உயர்வில்லாத ஈ ) தவறில்லாத

‘ வாய்த்தீயின் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வாய்த்து + ஈயின் ஆ ) வாய் + தீயின் இ ) வாய்த்து + தீயின் ஈ ) வாய் + ஈயின்

‘ கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கேடி + இல்லை ஆ ) கே + இல்லை இ ) கேள்வி + இல்லை ஈ ) கேடு + இல்லை

எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ ) எவன்ஒருவன் ஆ ) எவன்னொருவன் இ ) எவனொருவன் ஈ ) ஏன்னொருவன்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: