அறிவியலால் ஆள்வோம், மூதுரை

அறிவியலால் ஆள்வோம்

அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை . மண்ணில் , விண்ணில் , கடலில் , காற்றில் என எங்கும் ஆய்வுகள் நிகழ்கின்றன . மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர் . மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர் . கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை . நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான் . இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள் !

ஆழக் கடலின் அடியில் மூழ்கி

ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்

நீல வானின் மேலே பறந்து

நிலவில் வாழ நினைக்கின்றான்

செயற்கைக் கோளை விண்ணில் ஏவி

செய்தித் தொடர்பில் சிறக்கின்றான்

இயற்கை வளமும் புயலும் மழையும்

எங்கே என்று உரைக்கின்றான்

எலும்பும் தசையும் இல்லாது இயங்கும்

எந்திர மனிதனைப் படைக்கின்றான்

இணைய வலையால் உலகம் முழுமையும்

உள்ளங் கையில் கொடுக்கின்றான்

உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு

உடலும் உயிரும் காக்கின்றான்

அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து

அனைத்தும் செய்து பார்க்கின்றான்

நாளை மனிதன் கோள்களில் எல்லாம்

நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்

வேளை தோறும் பயணம் செய்ய

விண்வெளிப் பாதை அமைத்திடுவான் .

– பாடநூல் ஆசிரியர் குழு

பாடலின் பொருள்

மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான் . நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான் .

வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான் . இயற்கை வளங்களையும் புயல் , மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான் .

எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனையும் படைத்து விட்டான் . இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான் .

பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான் . அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறான் .

நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான் . அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான் .

வானை அளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்

சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் .

 – பாரதியார்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .  

மனிதன் எப்போதும் உண்மையையே

அ ) உரைக்கின்றான்ஆ ) உழைக்கின்றான் இ ) உறைகின்றான் ஈ ) உரைகின்றான்

ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) ஆழமான + கடல்ஆ ) ஆழ் + கடல் 3 . இ ) ஆழ + கடல் ஈ ) ஆழம் + கடல்

விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) விண் + வளி ஆ ) விண் + வெளி இ ) விண் + ஒளி ஈ ) விண் + வொளி

நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) நீலம்வான் ஆ ) நீளம்வான் இ ) நீலவான் ஈ ) நீலவ்வான்

இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .

ஆ ) இல்லாஇயங்கும் ஈ ) இல்லதியங்கும் அ ) இல்லாதுஇயங்கும் இ ) இல்லாதியங்கும்

மூதுரை

கல்விக்கு எல்லை இல்லை . மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான் . கல்வி மனிதனை உயர்த்துகிறது . கல்வியும் செல்வமாகக் கருதத் தக்கது , அது பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும் . கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது . அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான் . எனவே , நாமும் கற்போம் : வளம்பெறுவோம் .

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு .

– ஒளவையார் .

சொல்லும் பொருளும்

மாசற – குற்றம் இல்லாமல்

சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால்

தேசம் – நாடு

பாடலின் பொருள்

மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர் . மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு . கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு .

நூல் வெளி

இந்நூலின் ஆசிரியர் ஒளவையார் . இவர் ஆத்திசூடி , கொன்றை வேந்தன் . நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார் . மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள் . சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது . இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன .

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

மாணவர்கள் நூல்களை  _____ கற்க வேண்டும் .

அ ) மேலோட்டமாக ஆ ) மாசுற இ ) மாசற் ஈ ) மயக்கமுற

இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) இடம் + மெல்லாம் ஆ ) இடம் + எல்லாம் இ ) இட + எல்லாம் ஈ ) இட + மெல்லாம்

மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ ) மாச + அற ஆ ) மாசு + அற இ ) மாச + உற ஈ ) மாசு + உற

குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) குற்றமில்லாதவர் ஆ ) குற்றம் இல்லாதவர் இ ) குற்றமல்லாதவர் ஈ ) குற்றம் அல்லாதவர்

சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .

அ ) சிறப்புஉடையார் ஆ ) சிறப்புடையார் இ ) சிறப்படையார் ஈ ) சிறப்பிடையார்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: