அன்னை மொழியே – இரட்டுற மொழிதல்

அன்னை மொழியே

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்

சின்னக் குழந்தையின் சிரிப்பும் ஆனவள் ; பழுத்த நரையின் பட்டறிவும் ஆனவள் ; வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள் ; உணர்ந்து கற்றால் கல்போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள் ; அறிவைப் பெருக்குபவள் ; அன்பை வயப்படுத்துபவள் ; செப்புதற்கரிய அவள் பெருமையைப் போற்றுவோம்

அழகார்ந்த செந்தமிழே

அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே !

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !

இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே ! நற்கணக்கே !

மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே !

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !

செப்பரிய நின்பெருமை

 செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

 எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும் ?

 முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

 அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே !

-கனிச்சாறு

பாடலின் பொருள்

அன்னை மொழியே ! அழகு நிறைந்த செழுந்தமிழே ! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே ! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே ! பாண்டிய மன்னனின் மகளே ! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே ! பத்துப்பாட்டே ! எட்டுத்தொகையே ! பதினெண் கீழ்க்கணக்கே ! நிலைத்த சிலப்பதிகாரமே ! அழகான மணிமேகலையே ! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம் .

செழுமை மிக்க தமிழே ! எமக்குயிரே ! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும் ? பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே ! வியக்கத்தக்க உன்னுடைய நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன . எம் தனித்தமிழே ! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள , உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம் .

சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்

-க.சச்சிதானந்தன்

நூல் வெளி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு ( தொகுதி 1 ) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் ( தமிழ்த்தாய் வாழ்த்து , முந்துற்றோம் யாண்டும் ) எடுத்தாளப்பட்டுள்ளன . தென்மொழி , தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை . மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார் .

இவர் உலகியல் நூறு , பாவியக்கொத்து , நூறாசிரியம் , கனிச்சாறு , எண்சுவை எண்பது , மகபுகுவஞ்சி , பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் . இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை , தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது . இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன .

ஒரு மதிப்பெண் வினாக்கள்

அன்னை மொழியே என்ற நூலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரைமாணிக்கம்  

பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப் பொருளுரை நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது 

பெருஞ்சித்திறனார் நடத்திய இதழ்கள் தென்மொழி , தமிழ்த்திட்டு  

பெருஞ்சித்திரனார் பெற்றோர் துரைசாயி , குஞ்சம்மாள்   

 ‌பெருஞ்சித்திரனார் ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம்

பெருஞ்சித்திரனார் காலம் 10.03.1933 – 11.6.1995  

பெருஞ்சத்திரனார் சிறப்பும் பெயர் பாவலரேறு , தற்கால நக்கிர்  

பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் , பாவியக் கொத்து , நூறாசிரியம் , கனிச்சாறு , உலகியல் நூறு , பாவிய்க கொத்து , எண் சுவை எண்பது , பள்ளிப்பாறைகள் , மகபு குவஞ்சி கொய்யாக்கனி 

உலகத் தமிழ் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் பெருஞ்சித்திரனார்  

தமிழ் படித்தால் அறம் பெருகும் ; ஆகத்தில் ஓழிபெருகும் என்ற பாடலைப் பாடியவர் பெருஞ்சித்திரனார்

குமரி கண்டத்தில் அரசாண்ட மொழி அன்னை தமிழ்மொழி 

தென்னவன் என்பது பாண்டியன் குறிக்கும் சொல் 

பாண்டிய மன்னனின் மகள் அன்னை தமிழ்மொழி 

சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ” என்று கூறியவர் க.சச்சிதானந்தன் 

அன்னை மொழியே கவிதை இடம் பெறும் நூல் கனிச்சாறு

பொருள் கூறும்  

தென்னன் – பாண்டியன் 

தும்பி – வண்டு 

கணி – பழம் 

பாபத்தே – பத்துப்பாட்டு 

எண்தொகையே – எட்டுத்தொகை 

நற்கணக்கு – பதினெண் கீழ்க்கணக்கு 

மாண்புகழ்- திருக்குறன் 

மன்னும் – சிலப்பதிகாரம் 

வடிவு – மணிமேகலை 

மாண்பு – பெருமை  

பிரித்து எழுதுக

செந்தமிழ் – செம்மை + தமிழ் 

எந்தமிழ்நா – எம் + தமிழ் + நா 

பகுபத உறுப்பிலக்கணம் 

வாழ்த்துவம்- வாழ்த்து + வ் + அம்

வாழ்த்து- பகுதி 

வ் – எதிர்கால இடை நிலை 

அம் – தன்மை பன்மை வினைபற்று விகுதி 

முகிழ்ந்த – முகிழ் + த் + த் ( ந் ) + த் + அ

முகிழ் – பகுதி 

த் – சந்தி 

த்(ந) – ஆனது விகாரம்  

த்- இறந்தகால இடைநிலை 

அ – பெயரெச்ச விகுதி 

இலக்கணக் குறிப்பு 

 நறுக்கனி , செந்தமிழ் , செந்தாமரை – பண்புத்தொகை

 எழுப்ப , முகிழ்த்த – பெயரெச்சம் 

பாடி , குடித்து – வினையெச்சம் 

தென்னன் மகள் , நின் பெருமை – 6 ஆம் வேற்றுமை தொகை 

வாழ்த்துவோம் , முந்துற்றோம் – தன்மை பன்மை வினைமுற்று 

கன்னிக்குமரி , மண்ணுலகம் – உருவகம்

யாண்டும் – முற்றும்மை 

செந்தமிழ ! நறுங்கனியே ! மகளே – விளித்தொடர்

இரட்டுற மொழிதல்

-சந்தக்கவிமணி தமிழழகனார்

விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது . இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது . தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது ; விரிவுபடுகிறது .

ஆழிக்கு இணை

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

 மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

 இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

-தனிப்பாடல் திரட்டு

பாடலின் பொருள்

தமிழ் :

தமிழ் , இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது : முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது ; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது : சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது .

கடல் :

கடல் . முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது ; வெண்சங்கு . சலஞ்சலம் , பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது ; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது ; தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது .

சொல்லும் பொருளும்

துய்ப்பது – கற்பது , தருதல்

மேவலால் – பொருந்துதலால் , பெறுதலால்

பாடல்தமிழுக்குகடலுக்கு
முத்தமிழ்இயல் , இசை , நாடகம் ஆகிய முத்தமிழ்முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
முச்சங்கம்முதல் , இடை , கடை ஆகிய முச்சங்கம்மூன்று வகையான சங்குகள் தருதல்
மெத்த வணிகலன் ( மெத்த + அணிகலன் )ஐம்பெரும் காப்பியங்கள்மிகுதியான வணிகக் கப்பல்கள்
சங்கத்தவர் காக்கசங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமைநீரலையைத் தடுத்து நிறுத்தி  சங்கினைக் காத்தல்

இரட்டுற மொழிதல்

ஒரு சொல்லோ , சொற்றொடரோ பாடல் – இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும் . இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர் . செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன .

நூல் வெளி

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு ( ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு ) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது . இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார் . சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம் . இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் .

ஒரு மதிப்பெண் வினாக்கள்

ஆசிரியர் – தமிழழகனார் 

சிறப்பு பெயர் – சந்தக்கவிமணி தமிழழ்கனார் 

பெற்றோர் – வேலு , வள்ளியம்மை 

காலம் – 21.4.1929 -2.10.2015  

பிறந்த ஊர் – தூத்துக்குடி 

எழுதிய நூல்கள் – மழலை அழுதம் , பூ மத்தாப்பு , ஒளியைத் தேடி , இராம கவிதை , தமிழ்மகன் கவிதைகள் 

இரட்டுற மொழிதல் அணி என்பதன் வேறு பெயர் சிலேடைஅணி 

ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்  

சிலேடைகள் பயன்படுத்தப்படுவது செய்யுளிலும் , உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் 

மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் 

கடல் தன் அலையால் சங்கு தடுத்து நிறுத்திக் காக்கிறது 

கடல் தரும் சங்குகளின் வகைகள் மூன்று 

மூன்று வகை சங்குகள் வெண்சங்கு , சலஞ்சலம் , பாஞ்சசன்யம் 

ஆழிக்கு இணையாகப் பேசப்படுவது தமிழ் 

தமிழ் முத்தமிழை வளர்க்கிறது 

தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை ஐம்பெருங் காப்பியங்கள் 

முத்தமிழ் துயப்பதால் என்னும் பாடலின் ஆசிரியர் தமிழழகனார்

முத்தமிழ் துயப்பதால் என்னும் பாடல் தனிப்பாடல் திரட்டு நூல்லிருந்து இடம் பெற்றுள்ளது 

தமிழழகனார் 12 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்

சிலைடைகள் 2 வகைப்படும் செம்மொழிச்சிலேடை , பிரிமொழிச் சிலேடை 

பொருள் கூறுக 

ஆழி- கடல்  

துயப்பது – கற்பது தருதல் 

இணை – எடு 

மேவலால் – பொருத்துதல் , மெறுதல் 

பகுபத உறுப்பிக்கணம் 

கிடந்த – கிட + த் ( ந் ) + த் + அ , 

கிட – பகுதி 

த்(ந் ) – ஆனது விகாரம் 

த் – இறந்தகால இடைநிலை 

அ- பெயரெச்ச விகுதி 

காக்க – கா + க் + க் + அ , 

கா – பகுதி , 

க் – சந்தி , 

க் – இடைநிலை , 

அ – பெயரெச்ச விகுதி 

இலக்கணக் குறிப்பு 

மெத்த – பெயரெச்சம் 

காக்க – வியங்கோள் வினைமுற்று

மேவலாய் , துயப்பதால் , கண்டதால் – தொழிற்பெயர்கள் 

பரித்து எழுதுக 

மெத்த வணிகலன் – மெத்த + அணிகலன்

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: